உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

179

"தேங்காய், பூசணிக்காயாய் இருக்குமானால், பூசணிக்காய் எவ்வளவு பெரியதாய் இருக்கும், அத்தான்! அதற்குள் நீங்களும் நானும் வாலியும் புகுந்து இருக்கலாமே! பூசணிக்காய் உண்மையில் அவ்வளவு பெரியதாகவா இருக்கும்!” என்றாள்.

அவனால் பொறுக்க முடியவில்லை.

சும்மாகிட; அது, இந்த, ஆனையவ்வளவு பெரிதா யிருக்கும்.” என்று அவன் வாய்கூறிற்று. வாய் கூறுமுன் கை ஆனையவ்வளவு என்று காட்ட விரிந்தது. தான் வாலைப் பற்றிக்கொண்டு செல்வதை, அந்தோ அவன் மறந்து விட்டான்.

வாலின் பிடி அகன்றது.

அவன் விழுந்தான்:- அவனுடன் அனைவரும் சுருண்டு மடங்கி வானவெளியில் வேகமாக விழுந்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த வாலிக்கு ஒரு பேரதிர்ச்சி தென்பட்டது. அது தன்னையறியாமல் துள்ளிக்குதித்தது. இன்னதென்றறியாமல் அது ஆனையின் வாலையே பற்றி அதன் முதுகில் ஏறிக் கொண்டது.

வெள்ளானை துதிக்கையைப் பின்னால் நீட்டி அதைத் தடவிப் பார்த்தது.

குரங்கு அச்சத்தால் கீச்சுக்கீச் சென்று கத்திற்று.

அது குரங்குதான் என்றறிந்து யானை சிரித்தவண்ணம் துதிக் கையை முன் வாங்கிற்று.

வானுலகம் புறப்பட்ட முழுக்குடியிருப்பில் குரங்கு ஒன்றே கடைசி வரை யானையுடன் வானுலகம் சென்றது.

புயலில் சுருண்டு சுருண்டு விழும் சருகுக்கூளம்போல மனிதச்சங்கிலி வானில் புரண்டு வந்தது. சங்கிலியில் ஒவ்வொருவரும் தான் மீளாச்சாவுக்கு ஆளாய் விட்டதாக எண்ணிக் கலகலத்து மெய்மறந்தனர்.

ஆனால், வெள்ளானையின் இன்னருளால் எவருக்கும் எத்தகைய காயமும் ஏற்படவில்லை. ஒவ்வொருவராகக் காற்றடைத்த பந்தைப் போலவும், வில்வைத்த பொறியைப் போலவும் மெத்தென நிலத்தில் விழுந்து எழுந்தனர்.