உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180)

அப்பாத்துரையம் - 35

இரகசியம் எத்தனை பேர் வரை எட்டி, யாத்திரையில் எத்தனை பேர் கலந்திருந்தனர் என்பதை அப்போதுதான் அவர்கள் எல்லாரும் ஒருமிக்க உணர்ந்தார்கள்.

மாடம்பி எழுந்ததும் மங்கையைப் பார்த்துச் சீறினான்.

மங்கை வெட்கத்தால் தலையைக் குனிந்து கொண்டு ஒருபுறமாக ஓடினாள்.

பயணம் நிறைவேறாது போனதைப் பற்றிக்கூட மாடம்பி பெருங் கவலைப்படவில்லை. வெள்ளானை போனால் வேறு ஏதேனும் வானுலக விலங்கைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் முயற்சி செய்யலாம் என்று அவன் தேறினான். ஆனால், வாலி ல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை. வாலியை வானுலகுக்கு அனுப்பிவிட்டு மண்ணுலக மதுரைக்கருகில் இருந்து எப்படி வாழ்வது என்று மங்கைக்குக்கூட வருத்தம் ஏற்பட்டது.

அடுத்த ஆண்டு வெள்ளானையிடம் சொல்லி வாலியைத் திரும்பப் பெறுவது என்று மாடம்பி துணிந்தான். ஆனால், மங்கையால் அதுவரைகூடப் பொறுத்திருக்க முடியவில்லை. அவள் சித்தியிடம் சென்று முறை யிட்டாள். “உன்னால்தான் பயணமும் முறிந்தது. என் வாலியும் போயிற்று" என்று அழுதாள்.

வண்டார்குழலி அவளுக்குத் தேறுதலும் ஆறுதலும்கூறி, அவளை அடுத்தநாள் காலையிலேயே மீனாட்சியம்மன் திருமுன்பு இட்டுச் சென்று, அம்மனிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தாள்.

66

“அம்மையே, பெண் குலத்தின் பிழை பொறுத்து நீ தான் எங்களைக் காக்க வேண்டும். வாலியைத் திரும்ப மண்ணுலக மதுரைக்குக் கொண்டு வந்து தராவிட்டால், எங்களுக்கு நன்மை செய்த மாடம்பி மனம் வருந்த நேரும். அவன் மனைவியிடமும் அவன் மனம் வெறுத்து விடும்” என்றாள்.

அவர்கள் வேண்டுகோள் உடனே கேட்கப்பட்டது.உடனே நிறைவேறிற்று. வாலி, அம்மன் திருப் பின் இருந்து கீச்சுக்கீச் சென்ற குரலுடன் வந்து மங்கை கழுத்தைக் கட்டிக் கொண்டது. மங்கை துள்ளிக் குதித்தாள்.