உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

181

வாலியைப் பெற்ற மகிழ்ச்சியில் யாவரும் வானுலகை மறந்தார்கள். அம்மனருள்பெற்று வாலியை மீட்டுத் தந்த வண்டார்குழலியின் தவற்றையும் மங்கை முழுதும் மறந்தாள். வண்டார்குழலி அய்யாவுவின் பிழையையும், அய்யாவு ஆவுடையின் பிழையையும், ஆவுடை சாத்தி பிழையையும், சாத்தி எயினி பிழையையும் மன்னித்தாள்.

ஆனால், வாலி திரும்ப வந்ததில் உள்ள மாயத்தை எவரும் உள்ளபடி அறியவில்லை! அடுத்த ஆண்டு வெள்ளானை மூலம் மாடம்பிக்கு வாலி திரும்பிவந்த பயணம் தெரியவந்தது.

வானுலகில் எல்லாம் கிடைத்தது.

கடலை

கிடைக்கவில்லை. சிறப்பாக வாலிக்கு மிகப்பிடித்தமான வேர்க்கடலை, வானுலகத்தில் எவராலும் கொண்டுபோய்ப் பயிரிடப்படவில்லை. வானுலகில் வேர்க்கடலை கிடைக்காதது கண்டதே, வாலிக்கு வானுலகத்தின்மீது கொஞ்ச நஞ்சம் இருந்த மதிப்பும் போய்விட்டது. அது நிலவுலகுக்கு வரவேண்டுமென்று அட ம் பிடித்து வெள்ளானையைச் சுற்றிச்சுற்றி வந்து ஓலமிட்டது.

வெள்ளானைக்குக் குரங்கின்மீது இரக்கம் தட்டிற்று. அதை அன்றே நிலவுலகுக்கு அனுப்ப ஒரு வழியும் கிடைத்தது. இந்திர விழாதோறும் இந்திரன் யானை சென்று சொக்கலிங்கத்தை வணங்கிப் பூசை செய்தது போல, இந்திராணியின் யானை அதற்கு அடுத்த நாள் மீனாட்சியம்மனைச் சென்று வணங்கிவந்தது. இந்திராணியின் யானையை, அந்த ஆண்டுதான் இந்திரன் யானை திருமணம் செய்து கொண்டிருந்தது.

வெள்ளானை, குரங்குடன் சென்று, தன் புதுமனைவியிடம் கதை முழுவதையும் கூறிற்று. வெள்ளானையின் புதுமனைவி கதைகேட்டு விலாப்புடைக்கச் சிரித்தது. சிரிப்பு ஓய்ந்தபின் வாலியைத் தன் வாலிலேயே சுருட்டிக் கொண்டு நிலவுலகம் புறப்பட்டது.

வாலி நிலவுலகம் வந்த கதை இதுதான்.

மாடம்பி ஆண்டுதோறும் கடம்பவன ஒப்பனை செய்வதில் பின்னடையவில்லை. ஆனால், அவன் வெள்ளானையிடம் மீண்டும் ஒன்றும் வரம் கோரவுமில்லை. வாயாடி மங்கையுடனும் வாலியுடனும் வாழ்வதற்கு வானுலகம் தகுதியுடையதல்ல.