உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

||–

அப்பாத்துரையம் - 35

நிலவுலகமும் மதுரை நகரமும் மதிச்சியமுமே தகுதியுடையவை என்ற எண்ணம் அவனிடம் நிலைத்துவிட்டது.

அதை

மதிச்சியத்தில் ஒருபாதி மக்கள் தாம் ஒரு நாளிரவு வானில் பறந்த கதையை அடுத்த பாதியிடம் கூறினர். ஆனால், மறுபாதி நம்பவுமில்லை. நம்பாமல் மறுக்கவுமில்லை. இந்திரவிழாவன்று நள்ளிரவில் மதிச்சியத்தின் ஒருபாதி மதிமயக்கமுற்று அறிவு தடுமாறிற்று என்று அவர்கள் கேலிபேசத் தொடங்கினர்.

“கேட்டாயா!...

மதிச்சியத்திலேபாதி- ஒருநாள்

மதிமயங்கியசேதி!”

(கேட்)

என்று பாடி அவர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்வதை என்றும்

மறக்கவில்லை.