உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நீரரமைந்தன் நித்திலன்

தண்பொருநையாறு - இன்று ஏரலின் பக்கத்தில் கடலில்

சென்று விழுகிறது. நெடுங்காலத்துக்குமுன் அது - கொற்கை அருகே கடலுடன் கலந்தது. கொற்கை அன்று பெரிய நகரமாய் இருந்தது.

கொற்கை நகரிலிருந்து விலகி ஆற்றின் ஒரு வளைவின் நடுவிலிருந்த மணல்திட்டில் மணவாளன் என்ற ஒரு மீன்படவன் ருந்தான். அவன் பார்க்க அந்தசந்தமானவன். யாருடனும் சுமுகமாகப் பழகுபவன். ஆனால், அவன் மனைவி ஒய்யாரி அவனிடம் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பாள். மற்ற செம்படவரைப்போல அவன் மீன் பிடிப்பதிலோ அதை நகரில் கொண்டு விற்பதிலோ திறமையுடையவனல்ல என்பதே அவள் ஓயாத குற்றச்சாட்டு.

மணவாளன் மீன்பிடிப்பதில் அக்கரையில்லாதவனல்லன். ஆனால், காலமும் இடமும் அவனுக்கு எதிராக இருப்பது போலத் தோன்றின. அவன் வலைவீசிய இடத்தில் அடுத்த நாள் பிறருக்கு நல்லமீன் கிடைக்கும். அவன் வீசும் நேரத்திலேயே, பக்கத்தில் வீசுபவர்களுக்கு மீன் கிடைக்கும். ஆனால், அவனுக்கு அன்றன்றைக்கு வயிற்றைக் கழுவப் போதுமான மீன் கிடைப்பதே அரிதாயிருந்தது.

கரைப்புயலும் கடல்புயலும் கைகலக்கும் பருவம் ஒன்று உண்டு. ஆற்றுநீரைக் கடல் நீர் தடுத்து நிறுத்தும் அத்தகைய நேரங்களில்தான், சங்கு கருவுயிர்க்கும், முத்துக் கருக்கொள்ளும் என்று கரையோர மக்கள் கூறுவதுண்டு. அத்தகைய ஒருநாளில் மணவாளன் தனியே, தன்படகை மிதக்கவிட்டவனாய், ஆற்று நீருடன் கடல்நீர் கலக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

=