உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

||-

அப்பாத்துரையம் - 35

திடுமெனப் படகு குடை கவிழ்ந்தது போன்ற தோற்றம் அவனுக்கு ஏற்பட்டது. அதன்பின் என்ன நடந்தது என்பதை அவன் நெடுநேரம் அறியவில்லை.

ஒய்யாரி இரவு நெடுநேரம் அவனுக்காகக் காத்திருந்து பின் தூங்கி விட்டாள். மறுநாள் காலையிலும் அவன் வராதுபோகவே, படகு கவிழ்ந்து தன் கணவன் இறந்துவிட்டதாகவே அவள் கருதினாள்.

நாள் ஒன்றிரண்டாகக் கழிந்தது; வாரங்கள் கழிந்தன; ஒரு மாத முடிவில் மணவாளன் எங்கிருந்தோ திரும்பி வந்து வீட்டில் கால்வைத்தான். ஒய்யாரிக்கு வியப்பும் மகிழ்ச்சியும் மாறிமாறி வந்தன. அவனில்லாதபோது, அவளுக்கு அவன் மீதிருந்த வெறுப்பெல்லாம் மாறிவிட்டது அவள் அவனிடம் முன்னிலும் சுமுகமாகப் பேசினாள்.

ஒரு வாரமாக மணவாளன் எங்கிருந்தான் என்பது பற்றி மட்டும் அவன் மனைவிக்கோ மற்றவர்களுக்கோ சரியான விடை கூறவில்லை. புயலில் படகு எங்கோ சென்று கரையில் மோதிற்று என்றும், திரும்பத் தன்னூர் தேடிவர இவ்வளவு நாளாயிற்று என்றும் அவன் கூறி வைத்தான்.

தனக்கு நேர்ந்த செய்திகளை மணவாளன் அப்படியே கூறியிருந்தாலும், எவரும் அதை உண்மை என்று ஒப்புக் கொண்டிருக்கமாட்டார்கள். அது மனித உலக நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவு மாறாயிருந்தது.

படகுகுடைகவிழ்ந்தபோது மணவாளன் தான் இறந்துவிட இருப்பதாகத்தான் எண்ணிக் கண் மூடினான். ஆனால், அவன் கண்கள் தாமாகத் திறந்து கொண்டபோது, தான் இருப்பது இந்த உலகத்தில்தான் என்று அவன் வியப்படைந்தான். முத்தும், பவளமும் அவனைச் சுற்றி எங்கும் குவியல் குவியலாய்க் கிடந்தன. நிலவொளி எங்கும் வீசிற்று. நிலமெல்லாம் சங்கும் பாசியும் பதித்திருந்தன;

அவனருகே இருந்த முத்துக்குவியல் ஒன்றின்மீது, பவளப்பாறை ஒன்றில் சாய்ந்த வண்ணம் தந்தத்தால் கடைந்தெடுத்தது போன்ற ஒரு பாவை வீற்றிருந்தாள். அவள் பார்வையில் நேசமும், பாசமும் கலந்திருந்தன. அவன்