உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

185

கண்விழித்ததும், பொன்வெள்ளிப் பிடிகளுடன் சங்கினால் செய்யப்பட்டிருந்த கோப்பையில் அவள் அவனுக்கு இனிய தேன் அளித்தாள்.

அவள் அவனிடம் தமிழ்மொழியில் பேசினாள். ஆனால் அவள் பேச்சில் குழலின் இனிமையும் யாழின் இனிமையும் கலந்து சை பாடின. ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவன் வியப்பு அகன்றது. தன் புதிய சூழல் பற்றிய பல செய்திகளை அவன் கேட்டறிந்தான்; பலவற்றை அவன் கண்டு வியந்தான்.

அவன் இருந்த இடம் கடலின் நீர்பரப்புக்குக் கீழே இருந்தது; அவனைச் சுற்றி ஒளிவீசியது நிலவொளியுமல்ல; வெயிலொளியும் அல்ல; கடலகத்திலுள்ள முத்துமணி ஒளிகளே, அவனைச் சூழ்ந்து அலைபாய்ந்த வெளி, காற்று வெளியல்ல, கடல்நீரே. அவன் உடல்மீது மெல்ல வீசிய காற்று காற்றல்ல; கடலகத்தின் நீரோட்டமே. அவன்முன் இருந்த பாவை நில மாதன்று; கடல்மாதரிடையே ஒப்புயர்வற்ற ஒரு நீர்மங்கையே யாவள்! அவள் இடுப்பின்கீழ் நீல ஆடை போர்த்தது போலிருந்த பகுதி கால்களல்ல, மீனின் அடிப்புறமே. அத்தனையையும் மணவாளன் நுண்ணுர்வால் கண்டான்.

கடலகத்தில் தான் மூச்சுவிடவும் கண், காணவும் முடிந்தது. நீர் மங்கையின் மாயத்தாலேயே என்பதை அவன் உசாவி அறிந்தான்.

மனித உலகத்தில் அவன் காணாத செல்வமும் இன்பவாழ்வும், மனிதத் தொடர்பில் அவனுக்குக் கிட்டாத நேசபாசமும், கடலகத்திலுள்ள இந்த நீர்மாந்தர் வாழ்வில் அவனுக்குக் கிட்டின. அவனை இட்டுச்சென்ற மங்கை நித்திலச் செல்வி என்றும், அவள் கடற்புயல், கரைப் புயல் ஆகிய இருவரும் சேர்ந்து பெற்ற திருமகவு என்றும் அவன் அறிந்தான்.

அவள் வாழ்வுடன் அவன் வாழ்வு இசைந்தது. அவன் ஒய்யாரியின் ஒய்யாரத் தமிழ் உலகத்தையும் ஒய்யாரியையும் மறந்து சிலநாள் வாழ்ந்தான்.

ஒரு நாள் அவள் கேட்டாள், “அன்பரே, உமக்கு மேலுலகில் ஒருமனைவி உண்டல்லவா?” என்று.