உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

அப்பாத்துரையம் - 35

ஆம்” என்றான் அவன். “அவள் உங்களைத் தேடி எவ்வளவு கவலைப்படுவாளோ?" என்று மேலும் கேட்டாள்.

“ஆம் ஆனால் நீ ஏன் அதை நினைவூட்டுகிறாய். என்னுடன் வாழ்வதில் உனக்கு அலுப்புத்தட்டி விட்டதா” என்று கேட்டான்

மணவாளன்.

"இல்லை, எனக்கு உங்களுடன் என்றும் இருக்கத்தான் விருப்பம். ஆனால், நீங்கள் மனித இனம்; சிலநாள் வாழ்ந்தாலும் பல தடவை காதலிப்பவர்கள் நீங்கள். நாங்கள் மிக நீண்டநாள் வாழ்கிறோம். ஆயினும் ஒரு தடவைதான் காதலிக்கிறோம். படகில் உங்களைக் கண்டு என் ஆசைக்காக உங்களை இங்கே இழுத்து வந்தேன்; என்றும் நான் உங்களை மறவேன்; ஆனால், உங்களை உங்கள் மனைவியிடம் அனுப்புவது என் கடமை, என்றாள்.

மணவாளனுக்கு எதுவும் சொல்லமுடியவில்லை. ஆனால், மீண்டும் மனித உலகுக்குச் செல்லவே அவன் உள்ளூர விரும்பினான்.

அன்புடன் அவனைத் தழுவி அவள் அவனைக் கடல் பரப்புக்குக் கொண்டு வந்து, கரையருகே விட்டாள்.

வாழ்வு.

இதுவே மணவாளன் கடலகத்தில் கண்ட இடைக்கால

மாதங்கள், ஆண்டுகள் சென்றன. மணவாளன், நித்திலங்கொழிக்கும் கடலையும் நித்திலச் செல்வியையும் முற்றிலும் மறந்தே போனான்.

ஒய்யாரிக்கு இப்போது நாற்பது வயது கடந்துவிட்டது. மணவாளனுக்கு ஐம்பது கடந்துவிட்டது. ஆனால் அவர்கள் இப்போது இளமைக்காலத்தில் வாழ்ந்ததைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். மிகுதி முயற்சியில்லாமலே மணவாளனுக்கு மீன் கிடைத்தது. பிடித்த மீனுக்கு நகரத்தில் எப்படியோ நல்ல விலையும் கிடைத்தது.

சிறிது செல்வமே சேர்ந்தபின் மணவாளன் கடலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டான். மனைவியும் அவனை இந்தத் தள்ளாத வயதில் கடலுக்கு அனுப்ப விரும்பவில்லை. ஒருநாள்