உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

66

187

அவள் கணவனிடம் தங்களுக்குப் பிள்ளையில்லாக் குறை ஒன்று தவிர வேறு குறை இல்லை என்பதை நினைவூட்டினாள். ப்போது நமக்கு இருக்கும் செல்வத்துக்கு ஒரு குழந்தை மட்டும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! இவ்வளவு நாளைக்குள் அந்தக் குழந்தை ஓர் இளைஞனாக வளர்ந்திருப்பான் மற்ற மீன்படவருடன் மீன்படவனாக அவன் மீன்பிடித்து வருவான். முன், நான் உங்களுக்காகக் காத்திருந்தது மாதிரி, இப்போது நாம் இருவரும் நம் பிள்ளைக்காகக் காத்திருப்போம்” என்றாள்.

மணவாளன் ஒன்றும் பேசவில்லை.

அவன் சற்று வெளியே சென்றான்.

அவன் ஆற்றின் துறையிலிருந்த ஒருபடகிலேறிச் சிறிது தாலை சென்று திரும்பத் தொடங்கினான்.

அச்சமயம் படகின் பின்புறம் பளுவேறியதை உணர்ந்து அவன் திரும்பிப் பார்த்தான்.

ஐந்தடி உயரம் வளர்ந்த ஓரிளைஞன் எங்கிருந்தோ படகில் வந்து ஏறிக் குந்திக் கொண்டிருந்தான்.

"நீ யார்?" என்றான் மணவாளன்.

“நீங்கள் தானே மணவாளன்” என்றான் அவன்.

66

“ஆம், உனக்கு என் பெயர் எப்படித் தெரியும்?”

நான் உங்கள் பிள்ளை; என் தாய் நித்திலச் செல்வி தந்தையாகிய உங்களுக்கு இப்போது ஒரு பிள்ளையின் உதவி தேவைப்படுகிறது என்று கூறி, என் தாய் என்னை அனுப்பினாள்; மூன்றாண்டுகளுக்குக் குறையாமல் நான் உங்களுலகில் இருந்து உங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றும், நீங்களும் இவ்வுலகத்திய அம்மாவும் விரும்பினால் அதன் பின்னும் இருக்கும்படியும் அவள் கட்டளையிட்டிருக்கிறாள்" என்றான்.

தன் மனைவி தன்னிடம் கூறியது மணவாளனுக்கு நினைவுக்கு வந்தது. தன் கடலக மனைவியைத் தான் மறந்தாலும், அவள் தன்னை ஒவ்வொரு கணமும் நினைத்து, தன் காரியங்களைத் தொலைவிலிருந்தே கவனிக்கிறாள் என்பதை அவன் கண்டான்.