உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

அப்பாத்துரையம் - 35

நித்திலச் செல்வியிடம் அவன் உள்ளம் அவனையறியாமல் தாவிச் சென்றது. அவன் தன்மகன் நித்திலச் செல்வனை அன்போடணைத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தான்.

தன் மனைவியிடம் முன்பு சொல்லாமல் அடக்கிய கதையையெல்லாம் நித்திலச்செல்வனை அறிமுகப்படுத்துவதற் காக அவன் இப்போது சொன்னான்.

நித்திலன் மணவாளனை உரித்து வைத்தாற்போலவே இருந்தான். அதேசமயம் அவன் கண்கள் நிலவுலகில் காணாத நீலஒளி படர்ந்தும், காதுகள் அகன்று நினைத்த இடம் திரும்புவதாகவும் அமைந்திருந்தன. அவன் தோளும் எலும்புகளும் மலைகளை எடுத்துப் பந்தாடும் ஆற்ற லுடையவை போலத் தோற்றின.

அவனுக்கு வயது- இருபது. ஆனால், அவன் சின்னஞ்சிறு குழந்தைபோல மணவாளனை அப்பா, அப்பா, என்றும்; ஒய்யாரியை அம்மா, அம்மா என்றும் அழைத்துப் பாசம் காட்டினான்.

நித்திலன் வந்தது முதல் மணவாளனின் செல்வம் பெருக்கமுற்றது. நாள்தோறும் அவன் பேரளவில் மீன்பிடித்துவந்து நல்ல விலைக்கு விற்றான்.

அவன் வேலையைப் பார்க்க அவன் உணவு பெரிதன்று. அவன் மூன்றாள் உணவு உண்டான். ஆனால், பதின்மூன்றாட்கள் கூட அவன் செய்யும் வேலையைச் செய்ய முடியாது. ஆயினும் ஒய்யாரிக்கு அவனைப் பிடிக்கவில்லை.

அவள், அவன் உணவைக் குறைத்தாள். அவனுக்குக் குடிக்க நீர் இல்லாமல் எல்லாவற்றையும் கொட்டினாள். அவனிடம் டுஞ்சொல் கூறினாள்.

ஏற்கெனவே நிலவுலகின் சிறுகுடிலில் அவனுக்கு இருக்கைக் கொள்ளவில்லை. ஒய்யாரியின் கொடுமைகள் அவன் மனக்கசப்பைப் பெருக்கின. அவள் கடுமொழிகள் அவனை எரியாதவண்ணம் எரித்தன. அவன் தந்தையிடம் வந்து, “அப்பா, நான் உங்களிடம் இருக்கவே விரும்புகிறேன். மூன்றாண்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை.