உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

||-

அப்பாத்துரையம் - 35

ஆள் வாட்டசாட்டமாயிருப்பது கண்டு, பண்ணைக்காரன் உள்ளூர மகிழ்ந்தான்.“நீ என்ன வேலை செய்வாய்?” உனக்கு உழத் தெரியுமா? உழவு வேலையைச் செய்யத்தான் எனக்குத் திறமையான ஆள் வேண்டும்," என்றான்.

“ஒன்றிரண்டு நாட்களில் நான் அதைக் கற்றுக் கொள்வேன். அத்துடன் ஆறுபேர் வேலையை என்னால் செய்யமுடியும். எனக்குச் சம்பளமாக எதுவும் வேண்டியதில்லை. வயிறுநிரம்ப உணவு தந்தால் போதும்,” என்றான் நித்திலன்.

அன்று

தொழிலாளருக்காகச் சமைத்த உணவில் பெரும்பகுதி செலவாகாதிருந்தது. ஆகவே நித்திலனுக்கு வேண்டிய மட்டும் உணவு கிடைத்தது. வயிறார உண்டு, இரவு முழுவதும் அவன் களையார உறங்கினான். காலையில் பழஞ்சோறும், பழங்கறியும் ஏராளமாகக் கிடைத்தது.உண்டபின் அவன் வயலுக்குப் புறப்பட்டான்.

மற்றவர்கள் கலப்பையால் உழுவதைப் பார்த்து அவனும் கலப்பையை ஓட்டினான். கலப்பைகளை அவன் ஆழமாக நிலத்தில் செருகி இழுத்ததால், கலப்பைகள் முறிந்தன. பத்து ஆட்களால் இழுக்க முடியாத கலப்பைகளை அவன் ஒருவனே இழுத்து முறித்தது கண்டு. தொழிலாளர்கள் கலகலத்தனர். பணக்காரனோ தன் கலப்பைகள் போய்விட்டனவே என்று அங்கலாய்த்துக் கொண்டான்.

எல்லாருடைய ய வருத்தத்தையும் தீர்க்க நித்திலன் விரும்பினான். பல தொழிலாளர் மாலைவரை வேலை செய்தும் வயலில் கால்பங்கு கூட உழுது முடியவில்லை. அவன் காடுகரை வழியாகச் சென்று கலப்பைபோல உழுவதற்குரிய ஏதேனும் ஒரு பொருளைத் தேடினான். அவன் கண்ணில் ஒரு பெரிய இரும்புத்தூண் அகப்பட்டது. அதை அவன் நிலத்திலிருந்து அசைத்தெடுத்து முட்டில் வைத்து வளைத்தான். வளைத்த பகுதியை வயலின் ஒரு மூலையில் நிலத்தில் பதித்து, அதை வயலெங்கும் இழுத்தான். அரைமணி நேரத்துக்குள் வயல் முழுதும் ஒரே மூச்சில் உழுது முடிந்து விட்டது.

அரைமணி நேரத்துக்குள் வயல் முழுதும் உழுதாய் விட்டது என்பதைக் கேட்ட பண்ணைக்காரன் அதைச் சிறிதும் நம்பாமல்