உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

191

அங்கே சென்று பார்த்தான். ஆயிரம் பேர் உழுதது போல் வயல் முழுதும் நன்கு கிளறப்பட்டிருந்தது. தன்னிடம் வேலைக்கு வந்தவன் மனிதனல்ல, ஒரு பூதமே என்று நினைத்து அவன் அச்சம் கொண்டான்.

தொழிலாளர் பொறாமை, பண்ணைக்காரனின் அச்சம் ஆகிய எதையும் நித்திலன் உணரவில்லை. அவன் தொழிலாளருக்கு ஆக்கிய உணவில் பாதியையும், அவர்கள் குடிக்கவும் கையலம்பவும் வைத்திருந்த தண்ணீரில் முக்கால் பங்கையும் தீர்த்துக் கட்டிவிட்டு, "இன்று என்ன வேலை?” என்று கேட்டான்.

66

இந்த வேலையாளை வைத்திருப்பது ஆபத்து, ஆனால் அவனைப் போகச் சொன்னாலும் அவன் என்ன செய்வானோ? அவனை என்ன சூழ்ச்சி செய்தாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும்," என் று தொழிலாளரனைவரும் சேர்ந்து பண்ணைக்காரனிடம் சொன்னார்கள். அனைவருமாக ஊரிலிருந்த ஒரு சூனியக்காரனை அணுகி, வேலைக்காரன் உருவில் வந்த இந்தப் பூதத்தை ஒழிக்க வழி என்ன என்று கேட்டனர்.

இந்த மாதிரி மனிதப் பூதத்தைப் பற்றிச் சூனியக்காரன் கேள்விப் பட்டதில்லை. ஆயினும், எல்லாச் சூனியக்காரரையும் போலவே, அவன் சூழ்ச்சிக் காரனாயிருந்தான். சூனியம் செய்வது இவ்விடத்தில் ஆபத்து என்று கண்டு, அவன் சூழ்ச்சியையே தூண்டினான்.

ஊர்ப்புறத்தில் பாழடைந்த ஒரு ஆழக்கிணறு இருந்தது. “எல்லாத் தொழிலாளரும் சேர்ந்து அதைத் தூர்வார வேண்டும். நித்திலன் கீழே இறங்கி, வாளிகளில் சேற்றை நிறைக்க வேண்டும். மற்றவர்கள் அதை வெளியே இழுத்துக் கொட்ட வேண்டும். இந்த ஏற்பாட்டை அவனிடம் சொல்லுங்கள். அதே சமயம் கிணற்றின் அருகில் கற்களையும் பாராங் கற்களையும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். கிணற்றினடியில் நித்திலன் இறங்கியதே அவன்மீது கல்லெறிந்து கொன்று பாராங்கல்லால் அவன் வெளி வராமல் கிணற்றை அடைத்து விடுங்கள். இதுவே அவனை ஒழிக்க வழி," என்றான் சூனியக்காரன்.