உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

||-

அப்பாத்துரையம் - 35

அனைவரும் இந்த ஏற்பாட்டை மனமகிழ்ச்சியுடன்

ஏற்றனர்.

நித்திலன் கிணற்றில் இறங்கினான். கற்கள் கிணற்றினுள் மழை போலச் சொரியப்பட்டன.

"பறவைகளை அடித்தோட்டுங்கள். அவை மணலைச் சொரி கின்றன,” என்றான் நித்திலன் அடியிலிருந்து!

அவர்கள் அச்சம் பெரிதாயிற்று. அவர்கள் சாந்தரைக்க வைத்திருந்த பெரிய கல்லுருளையை அவன்மீது உருட்டித் தள்ளினர்.

கடற்புயல், கரைப்புயல் ஆகிய இரு புயல்களின் மரபில் வந்த நித்திலனைப் பாராங்கல் ஒன்றும் செய்யவில்லை. அது அவன் கழுத்தைச் சுற்றி அட்டிகை போல் வந்து விழுந்தது.

இத்தடவை கல்லெறிந்தது பறவைகளல்ல என்பதை நித்திலன் அறிந்து கொண்டான். அவன் வெளியேறி வந்து உரத்த குரலில் தொழி லாளர்களைப் பார்த்துக் குறும்புக் கேலி செய்தான். “என் ஒருவனைக் கொல்ல எத்தனை பேர்? நன்று நன்று!” என்று அவன் கைகொட்டிச் சிரித்தான்.

தம்மை என்ன செய்துவிடுவானோ என்று அஞ்சி நடுநடுங்கித் தொழிலாளர் பதுங்கி ஓடினர். பண்ணைக்காரனோ இதில் தனக்கு எத்தகைய பங்கும் இல்லாதவனாக நடித்துத் தொழிலாளரை அதட்டிக் கண்டித்தான்.

ஆனால், அன்றிரவே அவன் தொழிலாளரைத் திரட்டிக் கொண்டு சூனியக்காரனிடம் சென்று இரண்டாவது ஆராய்ச்சி மன்றம் நடத்தினான்.

பூதத்தைப் பூதத்தால்தான் ஒழிக்க முடியும். அடுத்த ஊரிலுள்ள ஓர் ஆழ்கசத்தில் மீன் நிறைய இருக்கிறது. ஆனால், யாரும் அதில் மீன் பிடிப்பதில்லை. அதில் வாழும் பூதம் அண்டி வருகிறவரை விழுங்கிவிடும். இன்றே இரவோடிரவாக நித்திலனை அதில் மீன்பிடித்து வரச் சொல்லுங்கள். அவன் திரும்பிவரவே மாட்டான்”,என்றான் சூனியக்காரன்.

பண்ணைக்காரன் இதைப் பக்குவமாக நித்திலனிடம் தெரிவித்தான். "நாளை காலையில் என் வீட்டுக்கு மிக முக்கியமான விருந்தாளிகள் வருகிறார்கள்; குறைந்தது ஒருமிடா