உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

193

மீன் தேவையாயிருக்கிறது; ஆகவே, இரவிலேயே கூடிய மட்டும் எவ்வளவு மீன் பிடிக்க முடியுமோ அவ்வளவு பிடித்துக் கொண்டுவா. நல்லகாலமாக ஊர்ப்புறத்திலுள்ள ஆழ்கசத்தில் மீன்கள் எராளமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். வலையுடன் உடனே போ,” என்றான்.

கசத்தருகில் ஒரு பாசிபடர்ந்த படகு கிடந்தது. நித்திலன் அதைக் கசத்தில் தள்ளி வலையுடன் அதில் ஏறிக்கொண்டான். நடுக் கசத்தில் வந்ததும் வலையை வீசினான்.

ஒரு

வலையை வீசியதுதான் தாமதம்; கசத்தின் ஆழத்திலிருந்து பேரலை கிளம்பிற்று; மறுகணம் நீர்ப்பரப்பில் நித்திலனையோ படகையோ காணவில்லை. ஆனால், அந்த டத்தில் தண்ணீர் குமிழியிட்டு அமளி குமளிப்பட்டது.

கசத்தில் கிளம்பிய அலை அந்தக் கசத்தின் ஆழத்திலிருந்து ஒரு பூதம் எழுந்ததால் ஏற்பட்டதேயாகும். அது ஆங்காரத்துடன் நித்திலனைக் கசத்தின் ஆழத்துக்கு இழுத்துச் சென்றது. நீரின் ஆழத்திலிருந்து அப்பூதம் முழங்கிய முழக்கத்தாலேயே கசத்தின் மேல்பரப்பு அமளிகுமளிப்பட்டது.

ன்னது நடந்தது என்று தெரியாமல் நித்திலன் சிறிதுநேரம் திகைத்து நின்றிருந்தான். கடலகத்திலேயே வாழ்ந்த அவனுக்குக் கசத்தின் ஆழம் ஒரு பொருட்டாகத் தோற்றவில்லை. அவன் பூதத்தின் பிடியிலிருந்து தன்னை உதறி விடுவித்துக் கொண்டு அதன் மீது தன் கைகளைக் குவித்துக் குத்துகள் விட்டான்.

இதுவரை எவர் எதிர்ப்புக்கும் ஆளாகாத பூதம் சீற்றமும் வெறியும் கொண்டு நித்திலனைத் தாக்கிற்று.

கசத்தின் ஆழ்தடத்திலேயே நீண்டநேரம் பூதமும் நித்திலனும் போரிட்டார்கள். இறுதியில் நித்திலன் பூதத்தை நிலத்துடன் நிலமாக ஓங்கி அறைந்து, அதன் மீது தன் கால்களையும் கைகளையும் அழுத்தி நெரித்தான். நோவு பொறுக்கமாட்டாமல் பூதம் முன்னிலும் உரக்க அலறிற்று.

66

“அன்புமிக்க மீன்படவனே! என்னை அருள்கூர்ந்து விட்டுவிடு; நான் உனக்குப் பெருஞ்செல்வம் அளிக்கிறேன்; விட்டுவிடு” என்று பூதம் கெஞ்சிற்று.