உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

||.

அப்பாத்துரையம் - 35

உன்னை விட்டு விட்டால், நீ டு விட்டால், நீ இன்னும் இங்கிருந்து எத்தனை பேருக்கோ கேடுசெய்வாய். உன்னை ஒழித்தே தீருவேன்,” என்று நித்திலன் மேலும் அதன்மீது தன் பிடியை இறுக்கினான்.

"நான் இந்த இடத்தை விட்டே போய்விடுகிறேன். பெருஞ்செல்வத்தையும் உனக்குத் தந்துவிட்டுப் போகிறேன்,” என்று பூதம் முன்னிலும் உருக்கமாகக் கெஞ்சிற்று.

"சரி. ஆனால் முதல் முதலாக, ஊர்க்கோயில் அருகி லிருக்கும் என் தலைவன் வீட்டுக்கு ஒருமிடா மீன் போய்ச் சேரவேண்டும் அப்படியானால்தான் விடுவேன்" என்றான் நித்திலன்.

“சரி” என்றது பூதம். நித்திலன் பூதத்தின் மீதுள்ள பிடியை

விட்டான்.

பூதம், தனக்கடங்கிய கூளிகளை அழைத்து மீனை ஊர்க்கோயி லருகில் பண்ணைக்காரன் வீட்டில் கொண்டு சேர்க்கும்படியும், தன் செல்வக் குவைகளை முற்றிலும் சாக்குகளில் கட்டி நித்திலனிடம் சேர்ப்பித்துவிட்டு அவ்விடம் விட்டுப் புறப்படும்படியும் உத்தரவிட்டது.

தன் வேலையில் பெரும்பகுதி முடிந்துவிட்டதால், நித்திலன் கரையில் சென்று தான் கொண்டுவந்து வைத்திருந்த உணவை உண்டான்.

பண்ணைக்காரன் வீட்டில் ஒருமிடா மீன் கொண்டு சேர்க்கப்பட்டு விட்டதாகப் பூதம் அனுப்பிய கூளி வந்து கூறிற்று, அதன் பின் பூதம், நித்திலன் காலடியில் ஏழு சாக்குப் பொன்னை வைத்து வணங்கிற்று.“ என் உயிரைக் காத்த ஆண்டவனே,நானும் என் கூளிகளும் இப்போது இங்கிருந்து நூறுகாதத்துக்கு அப்பால் சென்று விடுகிறோம். எங்கள் மீது கருணைகாட்டி, இந்தக் காணிக்கையை ஏற்றருளும்படி வேண்டுகிறேன்” என்றது.

"சரி, விரைவில் ஓடிப் போகாவிட்டால் துரத்தி வந்து எல்லாரையும் கொன்றுவிடுவேன். ஓடுங்கள் உடனே,” என்று நித்திலன் உலுக்கினான். பொன் சாக்குகளை விட்டு விட்டு அவைகள் குதிங்கால் பிட்டத்தில் பட ஓடின.