உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

195

அவை கண் மறையும்வரை பார்த்திருந்துவிட்டு, நித்திலன் ஏழு சாக்குகளையும் தலையிலும், தோளிலும், கைகளிலும், முதுகிலும் சுமந்து கொண்டு, பண்ணைக் காரன் வீடுநோக்கி வந்தான்.

பண்ணைவீட்டு முற்றத்தில் குவியல் குவியலாகத் திரண்டு கொழுத்த மீன்கள் உயிருடன் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால், விருந்தினர் யாரையும் காணவில்லை. பண்ணைக் காரனும் அவன் மனைவியுங்கூட வீட்டில் இல்லை.

மீன்களைக் கண்டதே, அவர்கள் கிலிபிடித்தவர்களாய்ச் சூனியக்காரனிடம் ஓடியிருந்தனர்.சூனியக்காரனோ சூனியத்தையும் சூழ்ச்சிகளையும் மறந்து, அவர்களைவிட மிகுதியாக அஞ்சி நடுநடுங்கினான்.

அச்சமயம் நித்திலன், வீடுவீடாக அவர்கள் களைத் தேடிக்கொண்டு அங்கே வந்தான். இந்த தடவை பண்ணைக் காரன், சூனியக்காரன், தொழிலாளர் யாவருமே சேர்ந்து தன்னை ஒழிக்க விரும்புவது அவனுக்கு வெட்ட வெளிச்சமாய் விட்டது. அத்துடன் அவர்கள் தன் மீது கொண்ட அச்சமே, வெறுப்புக்குக் காரணம் என்றும் கண்டான். அவன் உள்ளத்தில் அவர்கள் மீது இரக்கம் ஒருபுறமும், அவர்கள் நிலைகண்டு சிரிப்பு ஒருபுறமும் வந்தது.

“நேர்மையும் அன்பும் அற்ற கோழைகளே, என்னை அழிக்க இனி சதி செய்ய வேண்டியதில்லை. நானே போய்விடுகிறேன். ஆயினும், உங்களுக்கு நன்றியில்லாவிட்டாலும் நான் நன்றி கெட்டவனல்ல. உங்கள் ஊரில் சிலநாளாவது நீங்கள் இடமும், உணவும் கொடுத்தீர்கள். அதற்குக் கைம்மாறாக, நான் ஏற்கனவே உங்கள் ஊருக்குத் தொல்லை தந்த பூதத்தையும், அதன் கூளிகளையும் துரத்திவிட்டேன். நானும் போகிறேன். நீங்கள் அச்சமின்றி அமைதியாக வாழலாம். அத்துடன் உங்களுக்கு இந்தப் பொன்னிலும் சில சாக்குகள் தந்துவிட்டுப் போகிறேன். வளமான வாழ்வு காணுங்கள்,” என்றான்.

அச்சம் இன்னும் அவர்களைவிட்டு அகலவில்லை. அவன் சொன்னதும் புரியவில்லை. பண்ணைக்காரன் மட்டும் இப்போது சூனியக்காரனைப் பிடித்து வந்து, "இவன்தான் உங்களைக்