உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 35

(196) கொல்லத் தூண்டினவன். எங்களுக்கு எந்தப் பாவமும் தெரியாது,” என்று அவன் பேரில் முழுப் பழியையும் சுமத்த முன்வந்தான்.

"எல்லார் பிழைகளையும் நான் மன்னித்துவிட்டுப் போகிறேன், ஐயனே, உங்கள் அச்சம்தான் உங்களைத் தவறான வழியில் செலுத்திற்று. நீங்கள் மனமாரத் தீங்கு செய்யவில்லை. இதோ உங்களுக்கு ஒரு சாக்குப் பொன்னும் உங்கள் மனைவிக்கு ஒரு சாக்குப் பொன்னும் எடுத்துக் கொள்ளுங்கள். என்றான் நித்திலன்.”

பண்ணைக்காரனும் அவன் மனைவியும் அச்சமுழுதும் தெளிந்து அவனை வாயார வாழ்த்தினார்கள். “எங்களைவிட்டுப் போகவேண்டாம். வாழ்நாள் முழுதும் எங்களுடன் இரு, என்றார்கள்.

சூனியக்காரன் இன்னும் நடுங்கிக் கொண்டுதான் இருந்தான். பிறருக்குப் பரிசும் தனக்குத் தண்டனையும்தான் கிடைக்கும் என்று அவன் எண்ணினான்.

நித்திலன் அவன் பக்கம் திரும்பி, "இதோ ஒரு சாக்குப் பொன். இதில் பாதி நீ எடுத்துக்கொள். பாதியைத் தொழிலாளர்கள் எல்லாரும் பங்கிட்டுக் கொள்ளட்டும்," என்றான்.

அவன் உள்ளார்ந்த குணம் இதற்குள் எல்லாருக்கும் விளங்கி விட்டது. “எம் வாழ்வை வளமாக்க வந்த வள்ளுவரே, நாங்கள் உங்கள் பெருமையறியாமல் கெட்டு விட்டோம்.” என்ற பண்ணைக்காரனும் அவன் மனைவியும் சூனியக்காரனும் நித்திலன் காலடியில் விழுந்தார்கள்.

தொழிலாளர்களோ, “பாண்டிநாடு தந்த புதிய வள்ளுவர் வாழ்க! தென்னாடு தந்த தீந்தமிழ்ச் சித்தன் வாழ்க!" என்று ஆரவாரம் செய்தனர்.

"வாழ்க நிலவுலகம் வாழ்க! பொறாமையும் அச்சமும், சிறுமையும் வீழ்க,” என்று கூறிக்கொண்டே, அவர்கள் தடுத்தும் நில்லாமல், நித்திலன் மீந்த நான்கு சாக்குப் பொன்னுடன் புறப்பட்டான்.