உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

197

நித்திலன் நீரரமாந்தர் உலகைவிட்டு நிலஉலகுக்கு வந்து இதற்குள் ஏறத்தாழ மூன்றாண்டுகள் ஆய்விட்டன. அவன் உள்ளம் நில உலகின் மீது உவர்ப்புற்றது. கடலுலகில் தன் தாயைக் காண அவன் உள்ளம் துடித்தது. ஆயினும் தந்தைக்கும் நிலஉலகத் தாய்க்கும் தன் கடனாற்ற எண்ணி அவன் கொற்கையருகிலுள்ள அவர்கள் இல்லத்துக்கு விரைந்தான்.

மணவாளன் காலையில் தன் குடிசையின் வெளியே உட்கார்ந் திருந்தான். ஒய்யாரி உள்ளே அடுப்பில் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தாள். நித்திலன் திடுமென மணவாளன் முன் வந்து நின்றான்.

“அப்பா மூன்றாண்டுகளையும் உங்கள் உலகில் கழித்து விட்டேன். இனி ஒருகணங்கூட அன்பில்லாத இந்த உலகில் என்னால் இருக்க முடியாது. நான் போகிறேன். ஆனால் போகு முன் உங்களுக்கும் என் நிலஉலகத் தாய்க்கும் என் வணக்கமும் கடமையும் செலுத்த விரும்புகிறேன். இதோ உங்களுக்கும் என் தாய்க்கும் என் காணிக்கை,” என்று கூறி அவன் நாலுசாக்குப் பொன்னையும் தந்தை காலடியில் வைத்தான்.

வந்திருப்பது நித்திலன் என்றறிந்தும் ஒய்யாரி இதுவரை வெளியே வரவில்லை. காணிக்கை என்றவுடனே அது என்ன என்று பார்க்க வெளியே வந்தாள்.

மணவாளன் நித்திலன் உச்சியைத் தடவி, “அப்பனே, சிலநாளாவது இருந்து போகக்கூடாதா? இந்தச் சாக்குகள் எதற்காக? அவற்றில் என்ன இருக்கிறது?” என்றான்.

நித்திலன் தன் கதைமுற்றிலும் கூறிச் சாக்கிலிருக்கும் பொன்னை எடுத்துக் காட்டினான். ஒய்யாரி வந்திருப்பதறிந்து அவள் காலடியில் இரண்டு சாக்கை வைத்து, மணவாளன் காலடியில் இரண்டை வைத்து."எனக்குப் போக விடைதாருங்கள்.” காலடியில்இரண்டை என்று வணங்கினான்.

தங்கத்தைக் கண்டதே - அதுவும் சாக்குக் கணக்கில் கண்டதே- ஒய்யாரியின் பண்பு முழுதும் மாறிற்று. அவள் நித்திலனைக் கட்டிக் கொண்டு, "அருமை மகனே, எங்களை விட்டுப் போகவேண்டாம். உனக்கு வேண்டிய மட்டும் உணவு