உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

||-

அப்பாத்துரையம் - 35

தருகிறேன். நீ வேலையே செய்ய வேண்டாம். எங்களுடன் இரு என்றாள்.

""

மனைவியுடன் சேர்ந்து மணவாளனும் உருக்கமாக

வேண்டினான்.

66

"அப்பா, அம்மா! உங்கள் இருவர் அன்பும் கண்டு மகிழ்கிறேன். கடலகத்து அம்மாவிடம் உங்களிருவர் பற்றியும் நான் போய்க் கூறவேண்டும். அத்துடன் நான் உங்களை வெறுக்காவிட்டாலும், இந்த நிலஉலகை வெறுத்துவிட்டேன். என் அப்பாவையும் நில உலகில் அவரைப் பாதுகாக்கும் என் அம்மாவையும் நான் ஒரு போதும் மறக்கமாட்டேன். எனக்கு விடைகொடுங்கள்,” என்று நித்திலன் மீண்டும் வேண்டினான்.

மணவாளன் உண்மையிலேயே வருத்தத்துடன் விடைகொடுத்தான். ஒய்யாரிகூட அவனிடமிருந்து பிரியும்போது இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தினாள்.

நித்திலன் ஆற்றில் நீந்திச் சென்று அலைவாயருகே மூழ்கினான். காலைக் கதிரொளியில் அவன் தோள்களும் கைகால்களும் பவளங்கள் போலச் சிவப்பாகத் தோன்றின.

அவன் கண்கள் இரண்டும் இரண்டு முத்துகளாகவும்

தலையிலுள்ள நீலநிற மயிர்த்தொகுதி நீலப் பாசிகளாகவும் தென்பட்டன. அவன் மறைந்த இடத்தில் நெடுநேரம் வட்டஅலைகள் செந்தாமரை மலரின் இதழ்கள் போல ஒளி

வீசின.

கிடைத்தற்கரிய செல்வப் புதல்வனைப் பெற்றும் தன் சிறுமதியால் அவனை இழக்க நேர்ந்ததே என்று ஒய்யாரி வருந்தினாள். மகன் தந்துசென்ற செல்வத்தைக் காட்டி, மணவாளன் அவளுக்கு ஆறுதல் அளித்தான்.