உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. சேதாமை

கிட்டத்தட்ட நாற்புறமும் மலை

ஒரு

சூழ்ந்த பள்ளத்தாக்கில் கடம்பனேரி என்று ஓர் எரி இருந்தது. அதில் பல நீர்வாழ் உயிரினங்கள் இருந்தன. அவற்றுள் புழு, பூச்சி, மீன், தவளை போன்ற வலிமையற்ற சிறிய இனங்களுமிருந்தன.பாம்பு, சுறா, விலாங்கு முதலிய வல்லமை வாய்ந்த பெரிய உயிரினங்களும் இருந்தன. பெரிய உயிரினங்கள் சின்ன உயிரினங்களைத் தின்று வாழ்ந்தன. ஆனால், சிறிய இனங்கள் பெரிய இனங்களைவிட விரைவில் பிள்ளைக் குட்டி பெற்றுப் பெருகின. ஆகையால் எந்த இனமும் ஏரியில் அழிந்து விடவில்லை.

உயிரினங்களுள் ஒன்று, வலிமையற்ற இனங்களுடன் சேராமல், வலிமையுள்ள விலங்குகளுடனும் சேராமல் தனித்து வாழ்ந்தது. அதுவே ஆமை இனம். அது எந்த உயிரினத்தையும் தின்பதோ, துன்புறுத்துவதோ இல்லை. அதே சமயம் அதை எந்தக் கொடிய இனமும் அண்டுவதில்லை. அதன் மேலிருந்த தோடு அதற்கு ஒரு சிறு கோட்டையாயிருந்தது. தன்னைவிடப் பெரிதான எந்த உயிரினத்தைக் கண்டாலும் அது தன் கை கால்களையும் தலையையும் அந்தக் தோட்டைக்குள் இழுத்துக் கொள்ளும். அதைத் தகர்க்கும் சக்தி நீர்வாழ் உலகிலுள்ள எந்த விலங்குக்கோ, வெளியிலுள்ள விலங்குக்கோகூட இல்லை.

ஆமையினத்துக்கு எதிரி யாரும் இல்லாததாலும், அது பொதுவாக எல்லா உயிரினங்களைவிட நீண்டவாழ் நாளுடையதாயிருந்ததாலும், ஏரியில் அவ்வினம் தொகையில் பெருகிற்று.ஏரியின் ஆட்சி ஆமையினைத்தினிடமே இருந்தது.

எந்த வழியாகவோ அந்த ஏரிக்குள் முதலையினம் வந்து புகுந்தது. முதலில் முதலையின் ஒற்றன் வந்தது; பின் முதலையின் அரசனும் பரிவாரங்களும் படைகுடிகளும் வந்தன; ஏரியின் சின்னஞ்சிறு உயிரினங்களை ஆயிரக் கணக்கிலும், பாம்பு, சுறா,

=