உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(200

அப்பாத்துரையம் - 35

விலாங்கு முதலிய பேரினங்களை நூற்றுக்கணக்கிலும் அவை தின்றழித்தன.

ஆமையினத்துக்குக்கூட இப்போது ஆபத்து ஏற்பட்டது. முதலை களின் பரிய கொடிய உருவத்தைக் கண்டதே ஆமைகள் தம் வழக்கப்படி தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றன. அவை தலையையும் கை கால்களையும் தோட்டுக் கோட்டைக்குள் அடக்கிக் கொண்டன. ஆனால், ஒரு முதலை தோட்டுடனே ஓர் ஆமையை அப்படியே விழுங்கிற்று. அதைப் பார்த்த முதலைகள், இந்த எளிய முறையில் ஆமையினத்தை அழிக்க முற்பட்டன.

முதலைகளைவிட

மைகள் நீடித்த நீடித்த வாழ்நாள்

டையவை. முதலை யினத்தின் கொடுங்கோலாட்சிக்கு முன் ஆமையினமே அன்பாட்சி மிக்க குடியாட்சி நடத்தி வந்தது. ஆயினும், விரைவில் தம்மைவிட ஆண்டிலும் பண்பிலும் குறைந்த முதலையினத்திற்கு இரையாகி, அதன் தொகை வரவரக்குறையத் தொடங்கிற்று.ஆமையுலகமெங்கும் கிலி பரந்தது.

ஆமையினத்தின் காலம் இனி நெடுநாள் செல்லாது என்று ஆமை யுலக அறிஞர்களே கூறத் தொடங்கினர்.

நகரக்கூட முடியாதபடி அவ்வளவு முதுமையடைந்த ஓர் ஆமை, ஆமையின உயிர்களுக்கு ஓர் அறிவுரை கூறிற்று.

"நம் இனம் அழியாமல் இருக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. கூடியமட்டும் முற்றிலும் அழித்தொழிக்கப் படாமல் நாம் பத்துப்பன்னி ரெண்டு ஆமையூழிகள் கழித்து விடவேண்டும். அதற்குள் நமக்கு நம் கடவுளிடமிருந்து கட்டாயம் ஏதாவது உதவி கிடைக்கும்” என்றது அம் மூதாமை.

சில சிறிய ஆமைகள் இதைக் கேலி செய்தன.

66

“அவ்வளவு காலத்துக்குப் பின் காக்கும் கடவுள் இப்போது காத்தாலென்னவோ? ஏதோ அறிவுடையவர் மாதிரிப் பேசி இந்தக் கிழம் நம் சாவுப் போராட்டத்தை நீட்டிக்கப் பார்க்கிறது. சாவதாயிருந்தால் விரைவில் செத்து ஒழிய வேண்டும். பதுங்கிப் பதுங்கி நம் எதிரி வயிற்றுக்கு நாம் மிகுதியாக ஏன் வளந்தேடிக் கொடுக்க வேண்டும்,” என்று அவை கேட்டன.