உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

201

"முதியோர் சொல்லும் முழுநெல்லிக்காயும் முன் துவர்க்கும்; பின் இனிக்கும். நான் சொல்கிறபடி செய்யுங்கள். பின் அறிவீர்கள்,” என்று மூதாமை கூறிற்று.

அப்போதும் ள ஆமைகள் கேட்கவில்லை. மூதாமை அனுபவமிக்க சில ஆமைகளைத் தனியே அழைத்து, "அன்பர்களே, நம்மைவிட வலிமையுடைய இனங்களும் ம் வாழ்கின்றன. இதற்குக் காரணம் அவ்வினங்களின் ஒற்றுமையே. தலைவனாக ஓர் அரசனைத் தெரிந்தெடுத்து, அவை, அந்த அரசுக்கு அடங்கி நடக்கின்றன. நான் முடியாட்சி உயர்வுடையது என்று கருதவில்லை. ஆனால், இந்த ஒரு வகையில் நம் இனத்தின் குடியாட்சி நமக்கு இனப் பாதுகாப்பில்லாமல் செய்கிறது.

66

""

'நான் உங்களுக்கு அறிவுரை கூறுவது எனக்காக அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். நான் முதலைக்கு இரையானாலும் ஆகா விட்டாலும், ஒரு சில நாளில் இறக்கத்தான் போகிறேன். ஆனால், நம் இனத்தைக் காக்கும் வகையை நான் அறிவேன். அதை உங்களிடம் கூறி விட்டுச் சாகிறேன்.'

66

-

கடவுள் ஒவ்வோர் இனத்துக்கும் ஒவ்வொரு வகை வல்லமையை அளித்திருக்கிறார். மீனினம் - தன் தொகையைப் பெருக்கித் தன் இனத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. தவளை காய்ந்த மண்ணில் மண்ணுடன் மண்ணாய்க் கிடந்து மற்ற இனங்களைத் தாண்டி வாழ்கிறது. நம் இனமும் - தோட்டினாலும் நீண்ட வாழ்நாளாலும் இதுவரை தீங்கு செய்யாமலும் தீங்குக்கு ஆளாகாமலும் ஆட்சி செய்தது. இப்போது புதிய, கொடுமை மிக்க எதிரி முன், இவை இரண்டும் பயன்படவில்லை. ஆனால், கடவுள் நமக்கு இன்னும் ஓர் ஆற்றல் தந்திருக்கிறார். அதைக் கண்டு நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்."

மூதாமையிடம் ஏதோ புதிய அறிவு இருக்கிறது என்று கண்டு அனுபவமிக்க ஆமைகள் ஆவலாய்க் கேட்டன. தொலைவிலிருந்த இள ஆமைகளும் என்னவோ புதுச் செய்தி பேசப்படுகிறது என்று செவிகளைக் கூராக்கிக் கொண்டு உற்றுக் கேட்டன.

மூதாமை சற்று இளைப்பாறியபின் மீண்டும் பேசிற்று. “அன்பர்களே! பன்னிரண்டு ஆமையூழிக்கு ஒருமுறை