உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(202

அப்பாத்துரையம் - 35

ஆமையினத்திலேயே அறிவில் மிக்க ஒரு தனி ஆமை பிறக்கும்; னத்தின் அறிவு முழுவதும் அதில் இடம் பெறும்; அது ஆமையினத்துக்குப் புத்தம் புது வாழ்வளிக்கும்,” என்றது.

“அத்தகைய ஆமையைக் கண்டுகொள்வது எப்படி?” என்று பல ஆமைகள் ஆர்வத்துடன் கேட்டன.

“அந்த ஆமைமுழுதும் சிவப்பாயிருக்கும்” என் கூறிவிட்டு, அதுவே கடைசி மூச்சாக மூதாமை சாய்ந்தது.

மூதாமையின் அருமை தெரிந்து ஆமையுலகம் அதன் உடலை ஆரவாரத்துடனும் பெருமதிப்புடனும் அடக்கம் செய்ய முன்வந்தது.ஆனால் அந்தோ, இனத்தின் எதிர்காலத்துக்காகக் கடைசி மூச்சுவிட்ட அந்த ஆமையின் உடலையும் அதைத் தூக்கிச் சென்ற பல ஆமைகளையும் முதலையரசனும் அதன்

பரிவாரங்களும் விழுங்கி விட்டன.

ஆமையுலகத்தின் தன்மானம் முற்றிலும் பறிபோயிற்று. ஆமையினம் தன்னையே தான் மதிக்காத நிலை ஏற்பட்டது.

ஆமைகள் பத்து நூற்றுக்கணக்கில் பகையினத்தின் பசிக்கு ரையாய் அழிந்தன. மீனினமும் தவளையினமும் கூட ஆமையினத்தின் அழிவு கண்டு கேலி செய்யலாயின.

ஆமையினம் முழுதும் சாகாமல் பார்த்துக் கொண்டது முதலையினமே. விரைவில் பெருகும் மீனினத்தையும் தவளையினத்தையும் பாம்பினத்தையும் தின்பதிலேயே அது முழுக்கருத்துச் செலுத்திற்று. ஆமைகளை மெல்ல மெல்லப் பெருகவிட்டு, அரசமுதலையும் உயர்குடி முதலைகளும் மட்டும் அவற்றை அவ்வப் போது சொகுசான உணவாக உண்டன.

ஆமைகள் சில ஒருங்குகூடி வேறு ஏரிகுளங்களுக்குப் போய் விடலாமா என்று கூட ஆலோசித்தன.ஆனால்,வேறிடங்களுக்குச் செல்லும் நீர்ப்பாதைகள் ஒருசில. அவை முதலையினத்தின் ஆட்சியிலேயே இருந்தன. தவிர மற்ற எல்லா நீர்வாழ் உயிர்களும் வெற்றி கண்ட ஆட்சியினமாகிய முதலை இனத்துக்கே உடந்தையாயிருந்தது. ஆமையுலகின் ஆலோசனை களைக் காட்டிக் கொடுத்தன. ஆலோசனை கூறிய ஆமை முதல்வர்கள் தேடிப்பிடித்து விழுங்கப்பட்டனர்.