உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

[203

ஆமையினத்தின் வீர ஆமைகள், துணிகர ஆமைகள், அறிவுடைய ஆமைகள், ஆமையினத்தில் பற்றுடைய ஆமைகள் விரைந்தழிந்தன. அடிமை ஆமைகள், ஆமையினத்துக்கெதிராக எதிரிக்கு உளவுகூறிய ஆமைகள், நோயுற்று நலிந்த ஆமைகள் ஆகியவையே வாழ்ந்து வளர்ந்து பெருகின.

மை உலகம் வாழவிடப்பட்டது, ஆனால் ஆமை யினத்தின் நலத்துக்காக அல்ல; முதலையினத்தின் நலத்துக்காக. ஆமை உலக ஆண்டுகள் பல விரைந்து சென்றன. ஆமை உலக ஊழிகளும் ஒன்றொன்றாக உருண்டோடின.

பன்னிரண்டாம் ஊழியும் வந்தது. மூதாமை, கூறிய களை இதற்குள் பெரும்பாலான ஆமைகள் மறந்து

சாற்களை

விட்ட

ன.

வழக்கத்துக்கு மாறாக ஒரு பெண்ணாமை நீண்ட நாள் சூலாயிருந்தது. அது மலட்டாமை என்று பல ஆமைகள் அதை வெறுத்துத் தள்ளின.

ஏரியின் ஒருமூலையில் முதிய ஆமைகளுடன் அது சென்று இருந்தது. வரவரநோவு மிகுதியாயிற்று. சூல் முதிர்ந்து முட்டை வெளி வந்தபோது அது முற்றிலும் குருதிச் சிவப்பாயிருந்தது.

66

"ஆமையினத்தை வாழ்விக்கவந்த சேதாமை இதுதான்” என்றது ஒரு மூதாமை.

“இது ஆமையேயல்ல, வேறினம்” என்றன சில.

பெண்ணாமை

பாதுகாத்தது.

பொறுமையுடன்

முட்டையைப்

பிறந்த ஆமையும் மற்ற ஆமைகளைவிடச் சிறியதாய், மெல்லிய தோடுடையதாய், சிகப்பாய் இருந்தது. பெண்ணாமைக்குத் தாய்ப்பாசம் பெரிதாயிருந்தாலும், பிள்ளையைப் பார்த்ததும் அது பெருமூச்சு விடாமலிருக்க முடியவில்லை.

சேதாமை வளர்ந்தபின்னும் மற்ற ஆமைகளைவிட அது சிறந்தது என்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை. அது மிகுதி ஓடியாடு வதில்லை. உரத்துப் பேசுவதுமில்லை, அதை நோயுண்ட பிறவி என்றே ஆமைகள் கருதின. இளஆமைகள் அதன் மீதேறியும் அதைக் கடித்தும் விளையாடின.