உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(204

|-

அப்பாத்துரையம் - 35

இதனால் சேதாமை நாளடைவில் ஆமையினத்தினிட மிருந்தே ஒதுங்கித் தனித்து வாழத் தலைப்பட்டது.

தன்னைச் சூழ்ந்து கொக்கரித்த, இள ஆமைகளைக் கண்டு சேதாமை உண்மையில் அஞ்சவில்லை. ஆனால், அஞ்சுவதுபோல அது பாவனை செய்தது. அதே இள ஆமைகள் முதலைகள், முன் எப்படி நடந்து கொண்டன என்றும் அது பார்த்தது. முதலை தன்னை அணுகுமுன்னே அவை ஒவ்வொன்றாகத் தோட்டுக்குள் ஒடுங்கின. முதலை தின்றவைபோக மீந்தவை மீண்டும் கிளர்ச்சி யுடன் திரிந்தன. இவ் இள ஆமைகள் வீரமுடையவையல்ல; இனப் பற்றற்றவை என்று கண்டு, சேதாமையின் உள்ளம் உருகிற்று.

அனுபவமிக்க ஆமைகள்கூட, ஓட முயன்றனவேயன்றி, வேறு புதுவழி காணவில்லையே என்று அது கவன்றது.

அது செயலற்றுத் தன் வளைக்குள்ளேயே கிடந்து ஆர அமரச் சிந்தனை செய்தது. அதன் மூளையில் புதிய சிந்தனை ஒன்று தோன்றிற்று.

அது நேரே முதலையரசன் வாழ்ந்த பெருங்கரை நோக்கிச் சென்றது. வாயில் காவலர்களைச் சட்டை பண்ணாமல் அது அரசன் அருகிலேயே சென்று கல்லையும் மண்ணையும் வாரி இறைத்து ஆரவாரம் செய்தது.

அஞ்சி அஞ்சிப் பதுங்கும் ஆமையினத்தில் எவரும் இதுவரை இத்தகைய செயலைச் செய்ததில்லை. முதலை யரசனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

வாயை அகலத்திறந்து கோரப்பற்களைக் காட்டி அச்சுறுத்திய வண்ணம் முதலை அரசு ஆமையை நோக்கிப் பாய்ந்தது. சேதாமை சிறிதும் ஆடாமல் அசையாமல் அதை எதிர்நோக்கி நின்றது.

"யாரடா நீ, அறிவில்லாத ஆமை. முதலையினமென்றும் முதலையின் அரசனென்றும் பாராமல் வந்து அட்டகாசம் செய்கிறாய்? இம்மென்னும் முன் உன்னைப் போன்ற ஐம்பது ஆமைகளை நான் விழுங்கி ஏப்பமிடக் கூடியவன் என்று தெரியாதா?” என்று முதலையரசு வீறிட்டது.