உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

66

[205

‘ஆம், அரசே! எங்கள் இனம் உருவில் சிறிய இனம். உங்கள் அளவு நாங்கள் வளர்ந்திருந்தால் நீங்கள் வாலாட்டமாட்டீர்கள்” என்றது.

தன் இனத்தைக் கோழை இனம் என்று குறித்தது கேட்க, முதலை யரசனுக்குப் பொறுக்கவில்லை; ஆமையுடன் சரிசமமாகப் பேசவும் அதற்கு மனமில்லை; அது ஆமையைத் தன் நீண்ட அலகில் பொறுக்கி விழுங்கத் தொடங்கிற்று.

சேதாமை மற்ற ஆமைகளைப் போலத் தலையையும் கைகாலையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை. அதனால் அது அவ்வளவு விரைவாக உள்ளே சென்றுவிடவில்லை. தன் கால் கைகளில் முதலையின் பற்கள் படாமல் ஒதுங்கிக் கொண்டு, அது முதலையின் உள்ளிடத்தைச் சோதனையிட்டுக் கொண்டே மெல்ல உள்ளே சென்றது. ஆமையினத்தைப் போலவே, முதலைக்கும் புறத்தோடு தான் கோரமாயிருந்ததே தவிர, அகத்தே எல்லாம் மென்மையாகத்தான் இருந்தது. சேதாமை இதைக் கவனித்து, இடுங்கிய தொண்டைப் பகுதி வந்ததும், முதலையின் உட்கழுத்தை எட்டிப்பிடித்துக் கவ்விக்கொண்டது. கைகால்கள் அது கழுத்தின் உட்புறத் தோலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.

சேதாமையை விழுங்கி அதன் கதையை முடித்து விட்டதாக எண்ணிய முதலையரசன் வலி பொறுக்க மாட்டாமல் அலறிற்று. “குறும்புக் கார ஆமையே! ஏன் தொண்டையில் ஒட்டிக் கொண்டிருக்கிறாய்? உள்ளே போ, விரைவில் என்ற ஆங்காரத் துடன் ஆணையிட்டது. ஆனால், ஆமை பேசவில்லை, சொன்ன படி செய்யவுமில்லை. தன் கூரிய பற்களைத் தொண்டையின் மெல்யி சதையினுள் மேலும் பாய்ச்சி அழுத்திற்று.

முதலை வேதனையால் துடித்து, வாலைச் சுழற்றிச் சுழற்றி அறைந்தது.புரண்டு புரண்டு அலறிற்று “என்னைச் சாகடிக்கவந்த எமனே, உள்ளே போ! இல்லை என்றால் உன் இனத்தையே கொன்றுவிடுவேன்,” என்று உலுக்கிற்று.

66

சேதாமை பிடியைச் சற்றும் விடாமலே உள்ளிருந்து சிரித்தது. என் இனத்தவர் எத்தனை பேரை நீரும் உம் இனத்தாரும் காரணமில்லாமல் கொன்றிருக்கிறீர்கள். அதற்கு நான் பழிவாங்காமல் போகப் போவதில்லை. உம் கோபம்