உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(206) ||

அப்பாத்துரையம் - 35

இப்போது என்னை எதுவும் செய்ய முடியாது.நான் செத்தாலும் என் இனத்தின் பழியை உம்மீது தீர்க்க உறுதி கொண்டு விட்டேன்.” என்றது.

முதலையரசு நம்பிக்கையிழந்து உயிர்வாதைப்பட்டு மண்ணில் புரண்டு புரண்டு அழுதது.

அரசன் நிலைகண்ட பரிவார முதலைகள் வந்து நயந்தும், அச் சுறுத்தியும், ஆசை காட்டியும் சேதாமையின் உறுதியைக் கலைக்கப் பார்த்தன.

“ஆமையரசே, எம் முதலையரசுக்கு ஒப்பாக உம்மையும் அரசாக மதித்து நடத்துகிறோம். எம் அரசைப் பாதுகாத்து வெளியே வாருங்கள்,” என்று அமைச்ச முதலை கெஞ்சிற்று.

66

'ஆமையினத்துக்கு உங்கள் தயவால் நான் அரசாக விரும்பவில்லை. ஆமையினத்தின் அரசாவதைவிட ஆதிக்க அரசை ஒழிப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி."

நீங்கள் அனைவரும் என் இனத்துக்குச் செய்த பழிக்கு உம் அரசன்மீது பழி தீர்த்துக் கொள்ளாமல் விடப் போவதில்லை,” என்றது, சேதாமை.

உதவியற்றுத் தம் அரசன் துடிதுடித்துச் சாவதைக் கண்ட முதலை கள் அஞ்சி அந்த ஏரியைவிட்டே ஓடின.

பெருங்கரையில் நடந்த செய்திகளை முதலையுலகம் அறிந்து ஏரியை விட்டு ஓடிற்று. ஆனால், ஆமையினம் இன்னும் எதுவும் அறியவில்லை. ஆரவாரம் கேட்டுப் பல ஆமைகள் நாற்புறமும் ஓடிப் பதுங்கியிருந்தன; ஓடாதவையும் வாயும் கையும் காலும் அடக்கி “யோக” நிலையிலிருந்தன.

அச்சந் தெளிந்து அவை நடமாடத் தொடங்கின. எங்கும் முதலைகளைக் காணவில்லை என்று தெரிந்ததே, அவற்றுக்குத் தெம்பு வந்தது. அவை ஏரியெங்கும் சுற்றி உலவின. ஒருபுறம் மலைபோல முதலையரசன் கிடப்பதைக் கண்டு வியப்படைந்தன.

முதலில் அரசன் உறங்குவதாகவே எண்ணி அவை அண்டிவர அஞ்சின. நீண்ட நேரமாகியும் அது அசையாதது கண்டு ஒவ்வொன்றாக அதை அணுகி வந்தன. கல்லையும் மண்ணையும் எறிந்து பார்த்தன. சில சிறு ஆமைகள் வாலைக்