உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அப்பாத்துரையம் - 35

எனக்கு இதா வேலை?" என்று தடை கூறினாள். ஆனால், இளைஞன் கெஞ்சிப் பசப்பி அதைப் பெற்றுப் போனான்.

பந்தோ, பட்டமோ, மணிப்புறாவோ பின்னும் பின்னும் சிற்றன்னையிடம் சிக்கின. அவள் உள்ளத்தில் இப்போது புதிய திட்டம் உருவாயிற்று. இந்த இளைஞன் மூலமே அவன் உயிர்நிலையின் மாயத்தை உணர வேண்டும் என்று அவள் கருதினாள். அடுத்த தடவை அவள் அவனிடம் மணிப் புறாவைத் தராமல் வாதாடினாள்.

66

இதை நான் உனக்குத் தரவேண்டுமானால், நீ ஒரு செய்தியை எனக்கு ஒளியாமல் கூறவேண்டும். இல்லாவிட்டால் தர முடியாது" என்றாள் அவள்.

""

“என்ன வேண்டும்? கேளுங்கள் சொல்கிறேன்” என்றான்

கடம்பன்.

அவள், அவன் தோள்மீது கையிட்ட வண்ணம் கேட்டாள். உன் உயிர்நிலை எதில் இருக்கிறது? இதை எனக்குச் சொல்வாயா?” என்றாள்.

"இது என்ன புதுமாதிரிக் கேள்வி, அம்மா! என் உயிர்நிலை வேறு எங்கே இருக்கும்? என் உடலில் இருக்கும்!" என்றான் அவன். அவன் கபடமற்ற பேச்சில் வாய்மை தொனித்தது. ஆனால், அறியாமையும் நன்கு வெளிப்பட்டது.

"நான் இதைக் கேட்கவில்லை. ஒரு பெரியார் உன் அன்னையிடம் கூறியிருக்கிறார். உன் உயிர் நிலை ஏதோ ஒரு பொருளில் இருக்கிறதாம். உனக்கும் தெரியாவிட்டால், உன் அன்னையிடம் கேட்டுச் சொல்லு. ஆனால், நான் கேட்டதாகத் தெரியப்படாது. அப்போதுதான் புறாவைத் தருவேன்” என்று கூறினாள்.

கடம்பன் அப்படியே செய்வதாக வாக்களித்தான். மணிப்புறா அவன் மணிக்கை ஏறிற்று. அந்தக் கணமே அவன் பிஞ்சு உள்ளம் அந்த வாக்குறுதியையும் மறந்து விட்டது.

ஆனால், அடுத்த நாளே, கயற்கண்ணிக்கு மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டது. அவள் மாயத்தை அறிய மெல்ல மணிப்புறாவைக் கொடுக்க மாட்டேன் என்றாள்.