உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(234) ||__

அப்பாத்துரையம் - 35

கோப்பெரும் பெண்டு வரைந்தது," என முகவரியிட்ட முடங்கலைக் காட்டினாள்.

இளங்கொற்றன் உடனே அவளை வரவழைத்து, அவளிடம் நன்றி காட்டி, முகமனுரை கூறி வணக்கம் செய்தான்.

அவளும் அகமகிழ்வுடன் அவனை வாழ்த்தினாள்.

“தம்பி, உனக்கு நான் கொடுத்த ஆடுகள் என் மகன், அண்டர் கோனுக்குரியவை. அவனிடம் அவை உயிரை வைத்திருந்தன. அவன் பாடினால் மட்டுமே அவை ஆடும். அவனை இழந்த பின், அவற்றின் பாடலை நான் கேட்டதில்லை. பசுக்களிடம் நீ காட்டிய அன்பினால், நீயும் அவற்றை இயக்க முடிந்தது. இளமையிலேயே போர்க்களத்தில் மாண்ட என் புதல்வனாக, நான் உன்னைக் கருதியே உனக்கு அவற்றை அளித்தேன். ஆகவே, ஆடுகள் தந்த செல்வத்துடன், அவற்றை உனக்களித்த பசுக்களையும் பெற்று, உள் வேளாண் குலத்துக்கும், என் அண்டர் குலத்துக்கும் உரிய இருகுலச் செல்வனாக நீ வாழ்வாயாக,” என்று அவள் வாழ்த்தினாள்.

"இரு குலத்தோடு மூன்றாவதாகப் பொத்தப்பிப் ரு பெருஞ்சோழர் குடியும் சேர்த்து முக்குலம் வளர்க்க இருக்கிறாள், என் இளவரசி,” என்றான் இளங்கொற்றன் புன்முறுவலுடன்!

மூன்று பொதிகை மலை ஆடுகளும், “ஆம், ஆம்” என்று

தலை யசைத்தன.