உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

(233

தட்டில் ஏந்தியிருந்த நறுமண மாலையை அவள் எடுத்து அவன் தோள்களில் சார்த்தினாள்.

மன்னவையின் பல்லியங்கள் முழங்கின; இளவரசர் முகங்கள் வாடின; விரைவில் அவர்கள் திரள் காலைப் பனிபோலக் கலைந்தது; மக்கள் திரள் கார்கால முகில் போலத் திரண்டது.

ளவரசியுடன் இளங்கொற்றன் திருமணம் என்னும் மலர்ப்பிணையலால் பிணைக்கப்பட்டான். தம் உள்ளத்தில் இதுவரைச் சிறைப்படுத்தி வைத்திருந்த எண்ணங்களை யெல்லாம் இளவரசியும் அவனும் பரிமாறிக் கொண்டனர்.

திருமணம் முடிந்த பின், இளவரசி ஒருநாள் தன் தாய் தந்தையரையும் உறவினரையும் ஒருங்கே வரவழைத்தாள்; தன் மூன்று ஆடுகளையும் வரவழைத்தாள்; தன் வேய்ங்குழலைக் கொடுத்து, அரண்மனை இசை வல்லார் ஒவ்வொருவரையும் வாசிக்கும்படிக் கூறினாள்.

எவர் வாசிப்பிலும் ஆடுகள் கருத்துச் செலுத்தவில்லை.

இறுதியில் இளவரசி தன் கணவனிடமே அதைத் தந்து வாசிக்கும்படி கூறினாள். மூன்று ஆடுகளும் யாவரும் களிப்பில் மூழ்கும்படி இனிமையாகப் பாடின.

தம் மருமகனாக வந்த புதிய இளவரசன் ஆடுகளை அளித்த இளங்கொற்றனே என்பதை அரசனும் அரசியும், பிறகு இப்போது அறிந் தனர். ஆனால் அவர்கள் அதை இப்போது பொருட்படுத்தவில்லை. இளங்கொற்றன் இளவரசனாகவே நடந்து இதற்குள் அவர்கள் அனைவர் அன்பையும் மதிப்பையும் ஒருங்கே பெற்றிருந்தான்.

இளங்கொற்றன் தாய், இப்போது அரண்மனைக்கு வந்து, இளவரசி யாகிய தன் மருமகளுடன் இனிது வாழ்ந்தாள்.

ஆடுகளைக்கொடுத்துப் பசுக்களை வாங்கிச் சென்ற கிழவி ஒருநாள் அரண்மனைக்கு இரு பசுக்களையும் ஓட்டிக் கொண்டு வந்தாள்.

காவலர் முதலில் அவளை உள்ளே விட மறுத்தனர். ஆனால், அவள் அவர்களிடம் “அண்டர் கோனுக்கு அண்டர்