உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(232)

||-

அப்பாத்துரையம் - 35

ஒவ்வோர்

ளவரசராக, அரங்கத்தின் கீழிருந்த

உயர்பீடமேறி தம் கற்பனை விளக்கங்களைக் கூறினார்.

ஒவ்வொரு விளக்கத்தின் பின்னும் “இது சரியன்று” என்ற இள வரசியின் குரல் ஒலித்தது. விளக்கம் கூறிய இளவரசர் முகம் வாட, மலர்ச்சியுடன் மற்றொவருவர் வந்து ஆர்வத்துடன் விளக்கம் கூறினார்.

கிட்டத்தட்ட இளவரசர் அனைவரின் முறையும் தே முறையில் கழிந்து விட்டது.

அவையோர் முகத்தில் ஏமாற்றம். சேடியர் முகத்தில் மனக்கசப்பு, இவ்விரண்டையும் கடந்திருந்தது இளவரசியின் முகங்கடந்து பரந்த மனக்கலக்கம்.

கடைசி இளவரசனாக, அண்டர் கோன் உருவில் வந்த இளங் கொற்றன் படிகளில் ஏறினான்.

பழித்த எழில்மிக்க

"வெள்ளி பொன்மேனியைப் இளவரசியே! தம் நீனிறச் சுரி குழலிடையே, ஒளி நிறப்புரி குழலொன்றும், செந்நிறப்புரி குழலொன்றும், பச்சை நிறப்புரி குழலொன்றும் உள்ளன. இவற்றைக் குறிக்கவே கணையாழியில் அம் முந்நிறக் கற்களும் பதிக்கப் பெற்றுள்ளன. இவையே தங்கள் உள்ளம் குறித்த விளக்கம்” என்றான்.

66

அது சரி" என்ற இளவரசியின் குரல் கணீர் என்றொலித்தது. ஆனால், அந்தக் குரலில் ஆர்வம் இல்லை. குரலைத் தொடர்ந்து எல்லாரும் எதிர்பார்த்தபடி அவள் கால்கள் அரங்கத்திலிருந்து கீழே இறங்க முன்வரவும் இல்லை; அவள் அப்படியே பதுமையாகச் சமைந்து நின்றாள்.

இளங்கொற்றன் சட்டென அவள் உள்ளக் குறிப்பை ஊகித்துணர்ந்தான். தன்னிடமிருந்த அவள் கணையாழியில் அவள் கண்படும்படி அதைக் காட்டினான்.

மந்திரத்தால் இயக்கப்பட்ட பாவை போல, இளவரசியின் முகத்தில் ஒளி படர்ந்தது.

அவள் அன்னம் நடந்து வந்தது போல நடந்து அரங்கத்தின் படிகள் ஒவ்வொன்றாக இறங்கினாள். அருகேயிருந்த சேடியர்கள்