உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

[231

இளங்கொற்றன் தயங்கினான். அப்போது அவன் தாய் அவனிடம் இளவரசனுக்குரிய ஆடையணிகள் அடங்கிய ஒரு பெட்டியைக் காட்டினாள்.

66

66

“இவை ஏது?” என்றான் அவன்.

டுகளை உனக்குத் தந்த கிழவி அனுப்பியதாகக் குதிரை மீதேறிவந்த ஒரு வீரன் இதைக் கொடுத்தான். நான் அவனுக்கு நன்றி கூறுமுன் அவன் குதிரையேறித் திரும்பிச் சென்றுவிட்டான்' என்றாள் தாய்.

முதல் தடை நீங்கிற்று. இளவரசன் கோலத்திலேயே இளங்கொற்றன் இளவரசர்களுக்குரிய அவை சென்றான்.

இளவரசர் எல்லாருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அதைக் காட்டியே உட்செல்ல முடியும் அத்தகைய அழைப்பு இளங்கொற்றனுக்குக் கிடையாது. மற்றும் இளவரசருக்குரிய பெயரும் மரபும் கூற வேண்டிய இடத்தில் என்ன செய்வது என்று அவன் கவலைப்பட்டான்.

அவன் ஆடையணிமணிகளிடையே இருந்த கணையாழியும் கடிதமும் இந்தத் தடைகளையும் நீக்கின. கணையாழியில் “அண்டர் கோ” என்ற பெயர் பெறிக்கப்பட்டிருந்தது. அண்டர் கோனுக்குப் பொத்தப்பி அரசன் முத்திரையிட்ட அழைப்பிதழும் ருந்தது.

தடையும் தயக்கமும் நீங்கியதே தனக்கு இனி வெற்றி தான் என்ற மகிழ்ச்சியுடன் இளங்கொற்றன் அரசவைக்குப் புறப்பட்டான்.

இளவரசர் நெருங்கியிருந்த அவையில் எள்விழ இடமில்லை. அவைக் கூடத்தின் ஒரு கோடியில் ஓர் உயர் அரங்கத்தில் சேடியர்களுடன் இளவரசி பன்னிறமலர்களினிடையே அசைந்து தவழும் ஒரு வனமல்லிகை போல வந்து நின்றாள். அவள் கண்கள் மருண்டு மருண்டு இளவரசர் முகங்கள் மீது வட்டமிட்டன.

“என் கணையாழியில் ஒரு வைரம், ஒரு மாணிக்கம், ஒரு மரகதம் ஆகிய மூன்றும் பதிக்கப்பெற்றுள்ளன. அவற்றின் பொருளை அறிந்து கூற வல்லாருக்கே நான் மாலையிடக் கூடும்.” என்ற வெள்ளி மணி ஓசை போன்ற குரலில் இளவரசி கூறி வாய் மூடினாள்.