உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(230)

||

அப்பாத்துரையம் - 35

உள்ளத்திலுள்ள எண்ணங்களையும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கூறினான்.

இரண்டு மூன்று தடவை தன் குடிலில் காலடி எடுத்துவைத்த இளவரசியிடம், இளங்கொற்றன் தாய்க்குப் பாசம் ஏற்பட்டிருந்தது. ஆனால், அவள் இளவரசி என்பதையும், தாம் சிறுகுடிகள் என்பதையும் அவள் எளிதில் மறக்க முடியவில்லை. எனினும் சூழ்நிலை அவள் உள்ளத்திலும்கூட நம்பிக்கை வார்த்தது.

மூன்று ஆடும் வேய்ங்குழலும் பெற்ற பின் கூட ஆடுகள் பாடவோ ஆடவோ செய்யவில்லை. ஆகவே, இளவரசி அடிக்கடி இளங்கொற்றனை வரவழைத்து அவனைக் கொண்டே அவற்றைப் பாடி யாடவைத்து மகிழ்வாள். சில சமயம் அவள் ஆடுகளை இளங்கொற்றன் வீட்டுக்கு அனுப்பி வைத்து, தான் பின்னாடி வந்து அவன் துணைகொண்டு அவற்றைப் பாடியாடவைத்து மகிழ்வாள்.

ஆடுகள் பாடியாடுவதற்கு வேய்ங்குழல் மட்டுமின்றி அதைக் கையாளும் இளங்கொற்றனும் தேவை என்று கண்ட பின், அவனும் இன்றியமையாதவன் ஆனான். அவள் அவனிடம் உள்ளூரக் கொண்ட பாசத்தை மறைத்து, சிறு குடியினான அவனுடன் பழக இது ஒரு சாக்காக இருந்தது. இளங்கொற்றன் இதை முழுவதும் உணரவில்லை. ஆனால், அவன் தாய் இதை

ணர்ந்து கொண்டாள். தன் மகன் தன் எல்லைதாண்டி அவாவைச் செலுத்தியது பற்றி அவள் இப்போது மிகுதி கண்டிக்கவில்லை.

இளவரசிக்கு

இறங்கினான்.

மணமுடிக்கும் முயற்சியில் அரசன்

எல்லா நாட்டு இளவரசர்களும் வரவழைக்கப்பட்டனர்.

இளவரசியின் கணையாழியில் பதித்திருக்கும் வைரம், மாணிக்கம், மரகதம் ஆகிய முந்நிற மணிகளின் மருமத்தை விளக்குபவர்களுக்கே, இளவரசியை மணமுடிப்பதாக அரசன் பறைசாற்றினான்.

ளங்கொற்றன் உள்ளத்தில் மின்மினியாக ஒளிர்ந்த நம்பிக்கை, இப்போது விண்மீனாகச் சுடர்வீசிற்று. ஆயினும், இளவரசர் கூடிய அவைக்குத் தான் எப்படிச் செல்வது என்று