உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

229

"எது வேண்டுமானாலும் தாரளமாய்க் கேளுங்கள். என் அவா நிறைவேறுவதற்கு நான் எத்தகைய தியாகமும் செய்ய இணங்குவேன்,” என்றாள் இளவரசி.

“தங்கள் கணையாழியில் ஒரு வைரம், ஒரு மாணிக்கம், ஒரு மரகதம் ஆகிய மும்மணிகள் இருக்கும் மருமம் என்ன என்று அறிய விரும்புகிறேன்." என்றான் இளங்கொற்றன்.

அவன் கேள்வி அவள் விருப்பத்துக்கு மாறானதன்று. ஆனால், அஃது அவள் எதிர்பாராதது என்பதை அவள் முகம் காட்டிற்று.

“என்னை மணம் செய்ய விரும்புபவருக்குத்தான் இந்த மருமத்தை அறியும் எண்ணம் இருக்கும். அவ் விருப்பம் இந்த இளைஞனுக்கு இருக்கக் கூடுமா? இது ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இம் மருமத்தைச் சொல்வதால் எனக்குக் கேடு எதுவும் வராது. நன்மை விளையவும் கூடும். ஏனென்றால், இந்த இளைஞனைத் தவிர வேறு யாரும் இது வரை உள்ளத்தைக் கவர்ந்ததில்லை, என்று இளவர பலவாறாகத் தனக்குள் சிந்தனை செய்தாள். ஆனால், வெளிப்படையாக அவள் கூறிய சொற்களில் இவற்றின் நிழல் எதுவுமில்லை.

என்

""

"உங்கள் விருப்பப்படியே அந்த மருமத்தைக் கூறத் தடையில்லை; ஆனால், அது என் பெண்மைக்குரிய இரகசியம். அதை யாரிடமும் கூறமாட்டீர்களென்ற உறுதியுடன்தான் நான் கூற முடியும்." என்று அவள் தன் இணக்கம் தெரிவித்தாள்.

இளங்கொற்றன் இளவரசியின் செய்தியை இரகசியமாகக் காப்பதாக உறுதி கூறினான்.

அதன் பின்

வெளியிட்டாள்.

ளவரசி கணையாழியின் மருமத்தை

இளவரசியிடமிருந்து

மருமத்தை அறிந்தபின்,

இளங்கொற்றன் அவளுக்கு அகமகிழ்வுடன் மூன்றாவது ஆட்டையும் வேய்ங்குழலினையும் கொடுத்தான்.

இளவரசியிடம் தன் நாட்டம் சென்றதை, இளங்கொற்றன் இதுவரை தன் தாயிடம் கூடச் சொல்லவில்லை. மூன்றாம் ஆட்டையும் வேய்ங் குழலையும் கொடுத்தபின் அவன் தன்