உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(228) ||

அப்பாத்துரையம் - 35

“அன்புமிக்க இளைஞனே! ஆடுகள் இரண்டும் வாங்கிய பின்பும், என்ன முயற்சி செய்தும், அவற்றைப் பாடவைக்க முடியவில்லை. மூன்றாவது ஆட்டையும் உன்னிடமிருந்து கேட்பது சரியல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். அத்துடன் மூன்றையும் வாங்கின பின் கூட அவைபாடி ஆடாவிட்டால் என்ன செய்கிறது என்றும் கவலைப்படுகிறேன்," என்றாள் இளவரசி.

66

ஆடுகள் ஆடல் பாடலை மறந்து விட் விட்டனவோ என்னவோ?" அதை முதலில் பார்ப்போம் என்றான் அவன்.

மூன்று ஆடுகளையும் ஒருங்கே நிறுத்தி இளங்கொற்றன் வேய்ங் குழலை வாசித்தான். மூன்றும் பாடின; ஆடின; இளவரசி முற்றிலும் மெய்மறந்து அவற்றையே கவனித்தாள். ஆயினும் அவள் கவனம் ஆடுகளில் பாதியும் தன்னிடத்தில் பாதியும் இருந்ததாக இளங்கொற்றனுக்குத் தோன்றிற்று.

பாடி முடிந்ததும் இளவரசி முகத்தின் மகிழ்ச்சி சிறிது குறைந்ததாக அவனுக்குப் பட்டது.

"மூன்றாம் ஆட்டை மட்டும் வாங்கினால் போதாது என்பது இப்போது எனக்கு விளங்கிவிட்டது. ஆடுகளின் ஆடல் பாடல் அந்த வேய்ங்குழல் வாசிப்புடன் தொடர்புடையது என்றே எனக்குத் தோற்றுகிறது. ஆகவே, என் மீது அன்புகூர்ந்து மூன்றாவது ஆட்டுடன் அந்த வேய்ங்குழலையும் சேர்த்து நீங்கள் தந்தாலல்லாமல், என் அவா நிறைவேறுமென்று எனக்குத் தோற்றவில்லை," என்று இளவரசி கனிவுடன் கூறினாள்.

இளவரசி, இத்தடவை தந்தை மூலமாக உரிமையுடன் கேட்கவில்லை. நட்புப் பாசம் காட்டி, கோரிக்கையாக அன்புரிமையுடனே கேட்டாள். இளங்கொற்றன் உள்ளத்தில் கனிவும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆயினும் சிறிது தயக்கத்துடனேயே பேசினான்.

“அம்மணி, அழகிற் சிறந்த தம் ஆவலை நிறைவேற்றுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆயினும் ஆட்டுடன் வேய்ங்குழலையும் தருவதற்கு நான் தங்களிடம் உரிமையான எதையேனும் பெற்றுத் தானாக வேண்டும். என்றான்.”