உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

241

5. கலைவாணரின் கண்டிப்பு

கலைஞர்க்கும் கண்டிப்புக்கும் மிகத் தொலைவு என்று சொல்வதுண்டு. ஆனால் இதற்கு விலக்கானவர் டீன் ஸ்விஃப்ட்டு என்ற ஆங்கில ஆசிரியர்.

ஸ்பிஃப்ட்டிடம் மிகுதியும் அன்பும் நன்மதிப்புங் கொண்ட செல்வர் ஒருவர் அவரை விருந்தினராகப் பாராட்டி வர வேற்றார். அச்செல்வரின் பணியாளும் முறைப்படிஸ்விஃப்ட்டின் பணியாளை விருந்தினனாக மதித்துப் பாராட்டினான்.

ஸ்விஃப்ட்டு அச்செல்வரிடம் விடைபெற்று வர நேர மாயிற்று. அதற்குள் செல்வரின் பணியாள் உதவியால் ஸ்விஃப்ட்டின் பணியாள் தன் குதிரை மீதேறி ஸ்விஃப்ட் டுடன் செல்ல ஆயத்தமாக நின்றான். ஸ்விஃப்ட்டு வந்ததும் அவருக்கும் குதிரை ஏறச் செல்வரின் பணியாளே உதவி செய்ய வேண்டியதாயிற்று.

குதிரையிலேறியதும் ஸ்விஃப்ட்டு தன் பணியாளை மகிழ்ந்து நோக்கிய வண்ணம், செல்வர் பணியாளைச் சுட்டிக்காட்டி, “எனக்கு உதவிசெய்த இந்நண்பனுக்கு இரண்டு வெள்ளி பரிசு கொடுக்கலாமல்லவா?” என்றார்.

பணியாளன் ‘கொடுக்கலாம்' என்றான்.

பணயாள் இச்சிறு நிகழ்ச்சியை ஒரு நாகரிக முறை என்றெண்ணி மறந்துவிட்டான்.

ஆனால் ஊதியம் பெறும் நாளில் ஸ்விஃப்ட்டு தன் பணியாளுக்கு ஊதியத்தில் இரண்டு வெள்ளியைக் குறைத்துக் கொடுத்தார். அவன், “ஐயனே! இரண்டு வெள்ளி குறைவுற்றதே” என்று கேட்க அவர், உனது தொழிலை ஒருவனுக்குக் கொடுப்பது உனது பொருளை ஒருவனுக்குக் கொடுப்பதையே ஒக்கும் என்று உணர்க!” என்றார்.

66

வேலையாள் தம் பிழையறிந்து வெட்கினான்.