உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

249

13. முனிவினும் நல்குவர் மூதறிஞர்

சாளுக்க நகராகிய வாதாபியைக் கொள்ளையிட்ட பல்லவ வீரர்களுள் செங்கதிர்மாறன் என்றொரு பெருந்தகையாளன் இருந்தான். போரில் அவன், தன் மெய் முழுதும் காய மடைந்து விடாயால் வருந்தினான்.

அவன் தோழர்கள் போர்க் களத்திற்கு மிகவும் தொலைவிலிருந்து நறுநீர் கொணர்ந்தார்கள். அதை அவன் பருக நினைக்குமளவில் ஓர் ஏக்கக் குரல் கேட்டுத் திரும்பி நோக்கினான். னான். சாளுக்க வீரனொருவன் விடாயினால் நெடு நேரம் விக்கி ஏங்குவது கண்டு, தனக்கு வந்த நீரை அவனுக்கே கொடுக்க முனைந்தான்.

ஆனால், நீரை எடுக்கத் திரும்பியதும் அச்சாளுக்கன். தன் கைவாளை அவன் முதுகுப் புறம் வீசினான். நல்ல வேளை யாக சாளுக்கன் கையின் ஆற்றல் மிகவும் குன்றி யிருந்ததனால் செங்கதிர் மாறன் தப்பிப் பிழைத்தான்.

தன் உயிர் மறுத்து உதவி செய்த அவ்வள்ளலிடம் நன்றி கொன்ற சாளுக்கன் மீது அனைவரும் சீற்றங் கொண்டெழுந் தனர். செங்கதிர் மாறனும் சீற்றங்கொண்டான். ஆனால், அவன் பிறரைத் தடுத்து, “சாளுக்கன் எனக்குச் செய்த தீமைக்குத் தக்க தண்டனை நானே கொடுக்கிறேன்" என்று கூறினான்.

அதன்பின் அவன் அச்சாளுக்கனை நோக்கி, "நீ தூய வீரனா? நன்றிகொன்ற உனக்கு நான் நினைத்தபடி குடிக்க இருந்த நறுநீர் முழுமையும் தரக்கூடாது. இதோ பாதி நீர் மட்டும் தருகிறேன். குடித்துத் தொலை” என்றான்.

சீற்றத்திலும் ஈகையைக் குறைப்பதன்றி நிறுத்தாத அவன் இயற்கை அருட்குணங் கண்டு அச்சாளுக்கன் கூட மனம் மாறி அவனிடம் மீண்டும் நட்புக் கொண்டான்.