உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(250)

அப்பாத்துரையம் - 35

14. இடுக்கண் இன்பத்தின் பாதை

'இடமறிந்து வாய்மை பகர்க' என்னும் நெறி முறை மறந்து ஒரு குறிகாரன், ஓர் அரசன் கோள் வட்டப்படி அவனுக்கு வரும் தீமை ஒன்றை அறிந்து அவனிடம் கூறினான். அரசன், அஃது அவன் கோள் நூலிற் கண்டது என்று கொள்ளாமல், அவனைத் தூக்கிலிடும்படி உத்தரவிட்டான்.

ன்னது செய்வதென்று

குறிகாரன் மலைப்படைந்து அறியாது கலங்கினான். அப்போது அரசனுடைய விகடன் அவனுக்கு ஒரு வழி கூறினான். அதன்படி அரசனிடம் சென்று மிகவும் வணக்கமாக அடிபணிந்து, “அரசே, நான் ஓர் ஏழை. இறந்தால் வருந்துவதற்குக்கூட ஆளில்லை. நான் இறக்கச் சிறிதுந் தடையில்லை, ஆனால் என் இறப்புடன் இந்த நாட்டின் நிலைமையும் பிணைக்கப்பட்டிருக்கிறதே! அதனால்தான் கலங்குகின்றேன்" என்றான்.

அரசன், "உன் இறப்புக்கும் நாட்டிற்கும் அப்படி என்ன பிணைப்பு?” என்று கேட்டான்.

குறிகாரன், “அரசே! நான் பிறந்த நாளையும் கோளையும் அடுத்தே இந்நாட்டு மன்னராகிய தங்கள் நாளும் கோளும் இருக்கின்றன, என் வாழ் நாளுக்குமேல் சரியாக ஓராண்டு தங்கள் வாழ்நாள் மிகுதி உடையது, ஆகவே, என் முடிவு தங்கள் நலனைக் குறைத்தலாகாதே என்பதுதான் என் கவலை, இதையறிந்த என் நண்பர்களாகிய நாட்டு மக்களும் கவலைப்படுகின்றனர்" என்றான்.

குறிகாரன் எதிர்பார்த்தபடி அரசன் அவன் தண்ட ணையை நிறுத்திவிட்டான். அது மட்டுமன்று; அரண்மனை மருத்துவர் அரசனது உடல்நலத்தைப் பார்த்து வருவது