உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

அப்பாத்துரையம் - 35

போது, உயிர் மீண்டும் உடலில் வந்து பொருந்திற்று. இளவரசன் இரவு முழுவதும் இதனால் உயிர்பெற்று உலவினான். முதலில் அவன் தன் நிலையை உணர முடியவில்லை. ஆனால், மலர்கள் இதை விளக்கின. அவன் உடலின் பாதுகாப்பில் தந்தையின் ஆர்வம் புலப்பட்டது. மலர்களிலும் உணவு உடையிலும் நண்பனின் உயிர்த் துடிப்பும், அன்னை ஆராத்துயரார்வமும் வெளிப்பட்டன.

சற்று உலவியபின் இளவரசனுக்குப் பசியும் நீர் வேட்கையும் உண் டாயின. அன்னை அனுப்பி வைத்திருந்த உணவு, குடிநீர் வகைகளை அவன் உண்டான்.பழைய ஆடை களைந்து புத்தாடை உடுத்துக்கொண்டான்.ஆனால், பொழுது விடிவதற்குள் அவன் ராவாழ்வு முடிந்துவிட்டது. அரசி கயற்கண்ணி மாலையை எடுத்து அணிந்தாள். அவன் உடல் முன்போல் உணர்வற்றுப் பேச்சுமூச்சற்று, உயிர்ப் பிணமாய்க் கிடந்தது.

மாடலன் காலையில் வந்து மலர் தூவ வந்தான். உடலிலிருந்த மலர்கள் சிதறுண்டு கிடந்தன. ஆடைகள் மாற்றப்பட்டிருந்தன. உயிர் நீங்கி வாரக் கணக்காகியும், உடல் சிறிதும் வாடவில்லை. அத்துடன் அதில் புதுத் தளதளப்பும் காணப்பட்டது. அவன் ஒன்றுந் தோன்றாமல் விழித்தான்.

இரண்டு மூன்று நாட்கள் இதே நிலை நீடித்தது.“யாராவது வந்து உடைமாற்றி யிருக்கலாமா?" என்று அவன் நினைத்தான். தற்செயலாக அன்று முன்னிரவிலே அவன் வந்து பார்த்தான்.

உடல் வளர்த்தியிருந்த இடத்தில் அதைக் காணவில்லை; அவன் துணுக்குற்றான்; யாரோ இயங்கும் அரவம் கேட்டது; அவன் தோட்டத்தின் பக்கம் கண்களைத் திருப்பினான். அங்கே ளவரசன் உடலே உலவிக் கொண்டிருந்தது; அது பேயுருவோ என்று முதலில் கலங்கினான். ஆனால், உண்மையை அவன் விரைவில் உணர்ந்து கொண்டான். பின்னின்று அவன் ளவரசன் தோள்களில் கைவைத்தான்.

இளவரசன் திரும்பி பார்த்தான். நண்பர்கள் மீண்டும்

பழகினர்.

இளவரசன் தன் நிலையைக் கூறினான். உணர்ச்சிகளைக் கொட்டினான். அவன் பேச்சிலிருந்து இளவரசன் உயிரின் மாயம்; அதை உணர அரசி செய்த முயற்சி; அவள் சதி யாவும் விளங்கின.