உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

9

நாளும் அதற்கு நறுமலரிட்டு, பனிநீர்த் தூவி, அதைப் பேணக் கட்டளையிட்டான்.

இந்தப் பொறுப்பை இளவரசன் நண்பனான அமைச்சன் புதல்வன் மாடலன் ஏற்றுக் கொண்டான். பகலெல்லாம் உடலைப் பேணி அவன் நண்பனை நினைந்து உருகினான். இரவிலேயே தன் இல்லம் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டான்.

ளவரசன் உடல்நிலை கெடக்கெட, அரசி கயற் கண்ணியின் நோய் மறைவுற்றது. அவன் மாண்டபின் அவள் முன்னிலும் மகிழ்ச்சியுடைய வளானாள். மன்னன் இதைக் கவனித்தான். ஆனால், இது, தன் கருத்து அவள்பால் சென்றதன் பலன் என்று மட்டுமே அவன் கருதினான். இதில் ஓரளவு உண்மை ஏனென்றால், அரசன் ப்போது அவள் மாளிகையைப் புறக்கணிக்கவில்லை. மகன் மறைவால் செந்தாமரைதான் அரண்மனை வாழ்வில் பங்கு கொள்ள மறுத்தாள். அவள் தன் மாளிகை யிலேயே அடைபட்டுக் கிடந்தாள்.

இருந்தது.

கு

அவள் வழக்கமாகக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வ துண்டு. இப்போது அவள் செல்லும் ஒரே கோயில் மகன் வேனில் மாளிகையாயிருந்தது. அமைச்சர் புதல்வன் மாடலன் இட்ட மலர்களின் மேல், அவளும் நறுமலர்களை இட்டுப் பூசித்தாள். அத்துடன் புதல்வன் விரும்பும் உணவு, உடை முதலிய எல்லாப் பொருள்களையும் அவள் அவ்வப்போது நேரிலும் ஆள் மூலமும் அனுப்பி வைத்தாள். அவள் வாழ்வின் ஒரே ஆர்வச் செயலாக இது அமைந்தது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பது இயல்பு. அரசி கயற்கண்ணி பொன்மாலையைப் பகலில் மட்டுமே கழுத்திலணிந் தாள். இரவில் அதை அணிய அவளால் முடியவில்லை அத்துடன் மன்னர் கண்ணில் அது படுவதையும் அவள் விரும்பவில்லை. “அது ஏது?" என்ற கேள்வி எழுந்தால், படிப்படியாகச் செய்திகள் வெளிவர ஏதுவாய் விடும் என்றும் அவள் அஞ்சினாள்.

அரசி கழுத்தில் மாலை கிடந்ததனாலேயே இளவரசன் உயிர் பிரிந்திருந்தது. ஆனால், அவள் அதைக் கழற்றி வைத்த