உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

66

அப்பாத்துரையம் - 35

“அரசே, இது முற்றிய நோய். இதற்கு இச்சமயம் ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அதுவும் கிடைத்தற்கரியது. நீல மீனை அவள் தானே சமைத்து உண்ண வேண்டும். ஆனால், நல்லகாலமாக, அரசி செந் தாமரையின் குளத்தில் ஒரு நீல மீன் இருக்கிறது. அரண்மனை ஆளை விட்டு அதை இந்தக் கணமே தருவியுங்கள். இல்லையானால் அரசி உயிர் இனி ஒருநாள் னி தங்குவதுகூட அரிது” என்று மருத்துவர் முடிவு கூறினார்.

மன்னன் உடன் தானே மீனைத் தருவித்தான். அரசன் நேர் கட்டளைக்குமுன் அரசி செந்தாமரையின் காவல்கட்டுத் தளர்ந்தது. இச்செய்தியைச் செந்தாமரை அறியவும் இல்லை. நீலமீன் கயற்கண்ணி கைக்கு வந்தது. அன்றிரவே அவள் அதை அரிந்தாள். அதனுள் அழகே உருவான ஒரு பொன் மணிமாலை இருந்தது. அதை அவள் ஆர்வத் துடிப்புடன் எடுத்தாள். கழுத்தில் அணிந்து கொண்டாள்.

மீன் பிடிபட்ட அந்தக் கணமே கடம்பன் உடல் வெப்புக் கண்டது. அவன் அங்கங்கள் துடித்தன. அன்னை செந்தாமரை செய்தி இன்னதென்றறியாது திகைத்தாள். மன்னனும் அது கேட்டு ஓடோடி வந்து கண்கலங்கினான்.

கயற்கண்ணி, மீனை அரிந்த அந்த கணமே இளவரசன் கோவெனக் கதறினான். பொன் மாலையை அரசி கையில் எடுத்தவுடன் அவன் உணர்விழந்தான். அதை அவள் தன் கழுத்திலிட்டதே அவன் ஆவி உடலைவிட்டுப் பிரிந்தது.

ஆனால், உடல் விறைக்கவில்லை. பச்சைக் குழந்தை உடல்போலக் குழைந்தது.

அரசிசெந்தாமரை

தன் புதல்வன் உயிருக்காகத் துடிதுடித்துச் சுருண் டாள். அவள் முகம் அன்று முதல் நகையிழந்தது. நாட்டு மக்கள் கண்ணீர் வடித்துக் கலங்கினர். மன்னனோ, தன் குலக்கொழுந்தின் உடலை விட்டுப்பிரிய மனமில்லாமல், ஒருநாள் பகலும் இரவும் கழித்தான். அவனும் ஊணுடைகளை வெறுத்தான்.

இளவரசன் உடல் அசையவில்லையே தவிர, உடற்களை சிறிதும் நீங்கவில்லை. அதை அடக்கம் செய்வதை மன்னன் விரும்பவில்லை. அவன் இன்பமாகப் பொழுது போக்கிய வேனில் மாளிகையிலேயே அதைக் கண் வளர்த்தினான். ஒவ்வொரு