உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

அரசன்- உனக்கு உடன் பிறந்தார் உண்டல்லவா?

269

வீரன் - அத்தகைய நற்பேறு எனக்கில்லை ஐயனே! என் தந்தைக்குப் புதல்வன் நான் ஒருவனே, புதல்வியும் வேறில்லை.

இதைக் கேட்டதும், அரசன் பெருமூச்சுவிட்டு "அதோ பக்கத்தில் உன் நாட்டுப் படைஞர் பாடியாடி இன்புறு கின்றனர். அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டால் எளிதில் நீ உன் பெற்றோரிடம் சென்று சேரலாம்," என்று நாத் தழுதழுப்பக் கூறினான்.

வீரனும் பிறரும் ஒன்றும் தோன்றாமல் திகைத்தனர்.

அரசன், “மைந்தனே! உன்னை ஒத்த மைந்தனொருவனை இழந்த பின் எனக்கு உலகில் எதிலுமே இன்பமில்லாமல் போயிற்று.போரில் எத்தனை வெற்றி கிட்டினாலும் என்னளவில் இனி மன நிறைவேற்படுவதற்கில்லை. என் போன்ற அரசர் எத்தனையோ பேருடைய வாழ்க்கைகளை இங்ஙனம் எளிதில் வெறுமையாக்கிவிட முடியும். ஆனால் உன்னை பெற்றோரிடம் அனுப்புவதன் மூலம் என் துயர் தீராவிடினும் ன்னொருவர் துயரையாவது குறைத்தவனாவேன்” என்றான்.

உன்

அரசன் நல்லெண்ணங் கண்டு, கனிவும் நன்றியும் உடையனாய்த் தமிழ் வீரன் அவனை வணங்கி, “தங்கள் தந்தை யுள்ளத்திற்கு இறைவன் நிறைவளிப்பானாக! என் தாய் தந்தையரை இழந்த பின்பும் தந்தையைத் தந்த தந்தையாகிய உம்மை மறவேன்” என்று கூறித் தன் நாட்டுக்கு விடை கொண்டு சென்றான்.