உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(268

அப்பாத்துரையம் - 35

26. தந்தையின் உள்ளம்

சாளுக்க அரசனொருவன் பாண்டியருடன் செய்த சண்டை யொன்றில் தன் ஒரே புதல்வனை இழந்தான். பாண்டி நாட்டினரிடையே அவன் சிறை பிடித்த வீரருள் ஒருவன், கிட்டத்தட்ட தன் மகனை யொத்த அகவையும் சாயலும் உடையவனாய் இருப்பது கண்டு, அவனைத் தன் மகனாகக் கொண்டு போற்றிவந்தான்.

சில ஆண்டுகள் கழிந்தபின் சோழ அரசனும் பல்லவ அரசனும் சாளுக்க நாட்டின்மீது படையெடுத்தனர். அவர்க ளுடன் சண்டை செய்யப் பாண்டி நாட்டரசனும் தன் படை களை உதவியாக அனுப்பியிருந்தான். இருபுறப் படைகளும் நெருங்கி வந்து போர் புரிவதற்காகப் பாசறைகள் அமைத்துக் காத்து நின்றன. அப்பொழுது முழு நிலாக்காலமானதால் சாளுக்க அரசன், பாசறைக்கு வெளியில் வந்து உலாவிக் கொண்டிருந்தான். அவன் காதுகளில் தமிழ்ப்படைகளின் போர் ஆரவாரமும், போர் வீரமிக்க பாடல்களின் இனிய பண்களும் தென்றல் காற்றுடன் கலந்து வந்து இடையிடையே மோதின.

திடுமென அரசன் ஏதோ நினைத்தவனாய்ப் பாண்டிய வீரனை அழைத்து வரும்படி ஏவினான். ‘அரசனுக்கு யாது பிழை செய்துவிட்டோமோ?' என்ற அச்சத்துடன் வீரன் அவன் முன் வந்து நின்றான்.

அரசன் அவனை நோக்கி, “மைந்தா, நான் இதுகாறும் உன்னை அன்புடன் பேணி வந்திருக்கிறேன். இப்போது என் கேள்வி ஒன்றிற்கு விடை கூறுக! உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?"

வீரன் - ஆம், ஐயனே!