உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

267

வறியளாயினும் மன நிறைவும் நேர்மையும் உடைய அச்சிறுமியின் தாய், அதனை உடனே செல்வரிடம் திருப்பிக் கொடுக்கும்படி கூறினாள். செல்வன் அதனைக் கண்டதும் முன்னிலும் பன் மடங்கு மகிழ்ச்சியும் வியப்பு மடைந்தான்.

“எல்லாப் பிள்ளைகளும் தம் பசியினால் அப்பத்தை உடனே தின்றுவிட நீ மட்டும் ஏன் கொண்டுபோகிறாய்?" என்று அச்செல்வன் கேட்டான்.

அதன் காரணம் அறிந்த போது அவன் உள்ளம் முன் னிலும் கனிவுற்றது. அவன் அப்பொற்காசை அவளுக்கே கொடுத்ததோடன்றி நாள்தோறும் அப்பஞ்சம் தீரும்வரை ஒவ்வொரு காசு அவள் வீட்டிற்கு அனுப்பிவர ஏற்பாடுஞ் செய்தான்.

சிறுமியும் தாயும் அதனைத் தமக்கெனப் பெற்றுக் கொள்ளாமல் ஏழைகளின் பொருட்டுப் பெற்றுத் தம்மா லியன்ற அளவு ஏழைகட்கு அதனால் உணவிட்டு வந்தனர்.