உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(266) ||.

அப்பாத்துரையம் - 35

25. பொறுமைமிக்க சிறுமி

ஓர் ஊரில் பஞ்சம் நேர்ந்தது. பெரியவர்களும் சிறியவர் களும் வாடினர்.

செல்வனொருவன், அப்பஞ்சம் தீரும்வரை ஒவ்வொரு நாளும் ஒரு கூடை நிறைய அப்பங்கள் சுட்டு, ஊரிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் ஆளுக்கொன்றாய்க் கொடுக்க ஏற்பாடு

செய்தான்.

பசியால் வாடிய சிறுவரும் சிறுமியரும், நீ முந்தி, நான் முந்தி என்று மோதிக்கொண்டு வந்து கூடுமானவரை பெரியதாகப் பார்த்து ஒவ்வோர் அப்பம் எடுத்துக்கொண்டு போனார்கள். முதலில் எடுத்தவர்களுக்குப் மிகப்பெரிய அப்பமும் வரவரச் சிறிய அப்பங்களும் கிடைத்தன. கூட்டத்துடன் மோதாமல் தனித்து ஒதுங்கிப் பொறுமையுடன் நின்ற ஒரு சிறுமிக்கு இறுதியில் மீந்திருந்த மிக மிகச் சிறிதான ஓர் அப்பமே கிடைத்தது.

நாள்தோறும் அச்சிறுமி இப்படியே காத்திருந்து கடைசிச் சிறு அப்பத்தை எடுத்துக்கொண்டு போவாள். அதனோடு பிற சிறுவரைப்போல் அதை அங்கேயே தின்று விடாது, அவள் அதனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு போவாள். செல்வன் இதனை நன்கு கவனித்து அவள் மீது பரிவு

கொண்டான்.

சிறுமி அக்கடைசி அப்பத்தைக்கொண்டு போய் மெலிந்து வாடும் தன் தாய்க்குக் கொடுத்து, அவள் வற்புறுத்திக் கொடுக்கும் சிறு துண்டை மட்டிலுமே தான் தின்று வந்தாள்.

ஒருநாள் வழக்கம்போல் அச்சிறு அப்பத்தை வீட் டிற்குக் கொண்டுபோய்த் தாய் முன் அதைப் பிட்டுப் பார்க்கும்போது உள்ளே யிருந்து ஒரு பொன் காசு விழுந்தது.