உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

[271

28. சிறுமியின் அறிவுத்திறம்

ஒரு தொழிற்சாலையின் உயர்ந்த தூபி ஒன்றைக் கட்டிய தொழிலாளர். அது கட்டி முடிந்தவுடன் அதனுச்சியி லிருந்து உருளையிட்டிறக்கப்பட்ட கயிற்றேணியின் வழியாக இறங்கினர். ஆனால் நினைவு மாறாட்டத்தால் கடைசி மனிதன் இறங்கு முன்பே கீழ் இருந்த வேலையாள் உருளையினின்றும் நூலேணியைக் கீழே வாங்கிவிட்டபடியால், பல பனை உயர மிருந்த கோபுரத்தினுச்சியில் தன்னந்தனியே நின்ற அக்கடைசி மனிதன் இன்னது செய்வதென்றறியாது விழித்தான். அவன் தோழர்கள் அடியில் நின்று அவனினும் பன்மடங்கு மனங்கலங்கித் திகைத்து நின்றனர்.

உச்சியில் நின்ற தொழிலாளனுடைய சிறுமி இதனைக் கேட்டாள். பெரியவர்கள் எல்லாருக்கும் தோன்றாத எண்ண மொன்று அவளுக்குத் தோன்றிற்று. அவள் கோபுரத்தின் அடிப்பாகம் சென்று தந்தையைக் கூவியழைத்தாள். தந்தை அவள் பக்கம் பார்த்ததும் அவள் தன் மேலாடையை எடுத்துக் கிழித்து நீளமாக முடிந்து காட்டி இது போல் தலைப்பாகையைக் கிழித்துக் கீழே தொங்கவிடு என்றாள். தொழிலாளிக்கு முதலில் அது எதற்காக என்று விளங்கா விட்டாலும் செயலற்ற நிலையில் ஏதேனும் செய்வோம் என்று அங்ஙனமே செய்தான்.

உன்

சிறுமி அதன் கீழ் நுனியில் கனத்த நூல்கயிற்று உருண்டையைச் சுற்றி அதனை இழுக்கும் படி கூறினாள். பின் நூல் கயிற்றின் அடியில் பெருங் கயிற்றையும் அதனடியில் நூலேணியையும் கட்டினாள். தொழிலாளிக்கும் கீழிருந்த அவன் தோழர்களுக்கும் இப்போதுதான் சிறுமியின் நுண்ணறிவு விளங்கிற்று. தொழிலாளி நூலேணியை உருளையிலிட்டுக் கட்டிக் கீழே இறங்கித் தன் சிறு புதல்வியை மகிழ்ச்சி யுடன் எடுத்து வாரி யணைத்துக் கொண்டான்.