உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(272)

அப்பாத்துரையம் - 35

29. குறைகுடம் கூத்தாடும்

சோழப் பேரரசனாகிய இராசராசன், தஞ்சைப் பெருங் கோயில் கட்டுவதில் பேரூக்கம் காட்டி வந்தான். முன்னமே குறிப்பிட்ட நல்ஓரையுள், அதனை முடிக்கும்படி வேலையை விரைவுபடுத்த வேண்டுமென்று அவன் திருப்பணி மேலாட்களுக்குக் கட்டளை பிறப்பித்திருந்தான்.

வேலைக்கு எத்தகைய குந்தகமுமில்லாமலேயே அதனைப் பார்வையிட விரும்பிப் பேரரசன் யாதோர் ஆரவாரமு மின்றிப் பொது வழிப்போக்கன் போன்ற உடையுடன் ஒற்றை மாட்டு வண்டியிலேறிக் கோயிற்பக்கம் வந்தான்.

வேலையி

யாரோ வெளியூரான் கோயிலுக்கு வந்திருப்பதாக எண்ணி, வேலையாட்கள் தங்கள் வழக்கமான லீடுபட்ட வண்ணமாயிருந்தனர்.

கோயிலின் ஒருபுறம், பெரிய உத்தரக் கல்லொன்றைச் சுவர்மேல் ஏற்றவேண்டி யிருந்தது நூற்றுக் கணக்கான வர்கள் தோள் கொடுத்தும் அதை சுற்றிக் கட்டிய கயிறுகளை உருளையிட்டு இழுத்துங்கூடக், கல் மிகவும் பளுவாயிருந்த தனால் உயர்த்த முடியாது சற்றுச் சோர்வடைந்தனர். அத் தொகுதியின் மேலாள், "சீ, சோற்றாண்டிகளா முழு மூச்சுடன் தூக்குகிறீர்களா என்ன?” என்று தொலைவில் நின்று

கூவிக்கொண்டிருந்தான்.

பேரரசன் மேலாளை நோக்கி, "ஐய! தாங்களும் சென்று கைகொடுத்து ஊக்கப்படாதா?” என்றான்.

66

மேலாள் திடுக்கிட்டு அரசனை ஏற இறங்கப் பார்த்து,

என்ன ஐயா! உமக்கு, நான் மேலாள் என்பது தெரிய வில்லையோ?” என்று இறுமாப்புடன் கேட்டான்.