உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

[273

அரசன் “தங்களை அறியாது கூறிவிட்டேன். ஐயனே! பொறுத்தருள்க” என்ற கூறிவிட்டுத் தானே வண்டியிலிருந்து இறங்கி வேலையாட்களுடன் தோள்கொடுத்து ஊக்கினான். பார்வைக்குப் பெருஞ்செல்வர்போல் தோன்றிய அவரது முயற்சி கண்டு அனைவரும் முழு முயற்சியிலீடுபட்டுக் கல்லைத் தூக்கிவிட்டனர்.

மறுநாள் மேலாளுக்கு அரசனிடமிருந்து வந்த ஆணைச் சீட்டில், "இனித் திருப்பணிக்கு ஆள் போதா திருந்தால், அரசருக்குச் சொல்லியனுப்புக!"என்ற வாசகத்தைக் கண்ட மேலாளது உடல் எண்சாணும் ஒரு சாணாகக் குறு கிற்று. தன் இறுமாப்பின் சிறுமையையும் அரசனின் எளிமையையும் எண்ணி, அவன் மனநொந்து அன்றுமுதல் திருப்பணியில், தானே நேரிடையாக ஊக்கங் காட்டி வேலை யாட்களுக்கு எழுச்சி தந்தான்.