உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(274

அப்பாத்துரையம் - 35

30. அறிவும் அறியாமையும்

நாகரிகம் மிக்க நாடுகளில் கூடக் கல்வியறிவு குறைந்த மக்கள் தம் அறிவுக்கெட்டாதவற்றை மாயம் என்றும், மந்திரம் என்றும், தெய்வீகமென்றும் நம்பி அல்லலுறுகின்றனர். இந்நம்பிக்கையால் புதிய பொருள்களை அறியும் ஆராய்ச்சி யறிவைப் பெறாது அவர்கள் அறியாமைச் சேற்றிலேயே அழுந்திக்கிடக்க நேருகிறது.

உலக நாகரிகப்படியில் இன்னும மிகத்தாழ்ந்த படியி லேயே இருக்கும் தென்கடல் பகுதியிலுள்ள மக்களைப் பற்றிய கீழ்வரும் கதை இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சமயப் பணியி லீடுபட்ட ஆங்கிலப் பெரியார் ஒருவர், அப்பணியை முன்னிட்டு மேற்குறிப்பிட்ட தென்கடல் தீவு களுள் ஒன்றில் மனைவியாருடன் சென்று தங்கியிருந்தார்.

ஒரு நாள் பக்கத்தூருக்கு வேலையாகச் செல்லும் போது அவர் தம்முடன் தன் பணப்பையை எடுத்து வர மறந்து விட்டார். அது நினைவிற்கு வந்ததும், அவர் அங்கே கிடந்த ஓட்டுத் துண்டொன்றை எடுத்துச் சுண்ணாம்புக் கட்டியால் மனைவிக்கு அதன்மீது ஒரு குறிப்பெழுதி அங்கிருந்த ஒரு குடியானவனை அழைத்து, “இதனை என் மனையாட்டியிடம் கொடுத்து, அவள் தருவதை வாங்கிவா" என்றார்.

குடியானவன் "என்ன வேண்டுமென்று அவளிடம் சொல்லவேண்டாமா?” என்றான்.

பெரியார் : நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவள் தருவதை வாங்கிவா.

எழுத்தறிவு அந்நாட்டார் அறிவெல்லைக்கு அப்பாற் பட்டதாயிருந்தது. ஆகவே, குடியானவன், "இது என்ன?