உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை இன்பம்

275

வேண்டா வேலையாயிருக்கிறது! ஓர் ஓட்டை இத்தனை தொலைவிணில் சுமந்து செல்லச் சொல்லுகிறாரே இவர்!” என்று

எண்ணினான்.

ஆனால், வீட்டில் பெரியாரின் மனையாட்டியிடம் அவ்வோட்டுத் துண்டைத் தந்ததே அவள் அதைப் பார்த்து விட்டு விரும்பிய பொருளை எடுத்துக் கொடுத்துவிட்டாள். வியப்புடன் அவன், “அம்மா, ஐயாவுக்கு வேண்டிய பொருள் இன்னதென்று நான் சொல்லாமல் நீங்க எப்படி அறிந் தீர்கள்?” என்றான்.

அவள் சிரித்துக்கொண்டே, “நீ சொல்லாவிட்டாலும் ஓடுதான் சொல்லிற்றே!” என்றாள்.

குடியானவன் அவள் சொல்லை அப்படியே நம்பி விட்டான். அம்மையார் எறிந்த ஓட்டை அவன் தலைமேற் கொண்டு எல்லாரிடமும், "ஆங்கிலேயர் எப்படி உலகை ஆளுகிறார்கள் தெரியுமா? அவர்களிடம் தெய்வசித்து இருக்கிறது. அவர்கள் அச்சித்தினால் ஓட்டைக்கூடப் பேச வைக்கிறார்கள்” என்று கூறினான்.

அந்நாட்டு மக்கள் அவ்வோட்டை ஒரு தெய்வமாக்கி அதற்குக் கோயில் கட்டினர். சமயப்பணியாளர் எவ்வளவு முயன்றும் இப்புதிய தெய்வவணக்கத்தைத் தடுக்க முடிய வில்லை. அவர் சித்தாகிய கல்விப் பயிற்சி முறையை அவர்கள் ஏற்கச் செய்யவும் இப்புதிய தெய்வ வணக்கம் பெருந் தடையாயிற்று. ஏனெனில் அவர் எழுதிய எதனையும் அவர்கள் தெய்வமாகக் கொண்டு கும்பிடத் தொடங்கினரே யன்றி அதனைக் கற்றுக்கொள்ள முயன்றார்களில்லை.